ரசிகர்களுடன் அடிதடி: பாகிஸ்தான் வீரரை தரதரவென இழுத்துச் சென்ற பாதுகாவலர்!
Siraj: "அதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை" - சாம்பியன்ஸ் டிராபிக்கு தேர்வாகாதது குறித்து சிராஜ்
டிராவிஸ் ஹெட் விக்கெட்
ஹைதராபாத்தில் நேற்று (ஏப்ரல் 6) நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வென்றது.
இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியில், அதிரடி ஒப்பனர்கள் டிராவிஸ் ஹெட்டையும், அபிஷேக் சர்மாவையும் பவர் பிளேயிலேயே விக்கெட் எடுத்தார் சிராஜ்.
மொத்தமாக, 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

சிராஜின் இந்த சிறப்பான பவுலிங்கால் ஹைதராபாத் 152 ரன்கள் மட்டுமே அடித்தது. பின்னர், கில், வாஷிங்டன் சுந்தர், ரூதர்ஃபோர்ட் ஆகியோரின் அதிரடியால் 17-வது ஓவரிலேயே குஜராத் வெற்றிபெற்றது. சிராஜ் ஆட்டநாயகன் விருது வென்றார்.
போட்டி முடிந்த பிறகுப் பேசிய சிராஜ், ``ஆர்சிபி-க்காக 7 வருடங்கள் விளையாடியிருக்கிறேன். பந்துவீச்சில் கடினமாக உழைத்திருக்கிறேன். அது எனக்கு நன்றாக உதவியிருக்கிறது.
ஆனால், ஒரு கட்டத்தில் அதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இருப்பினும், எனது ஃபிட்னஸ், விளையாட்டில் தீவிரமாக ஈடுபட்டேன்.

நான் என்ன தவறுகளைச் செய்திருந்தாலும், அவற்றைச் சரிசெய்யும் வேலையில் இறங்கினேன். என்னை நானே உற்சாகப்படுத்திக் கொண்டு ஐ.பி.எல் போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.
பந்துவீச்சில் நீங்கள் கொடுக்க முயல்வதை நீங்கள் கொடுத்துவிட்டால் நீங்கள் டாப்-இல் இருப்பீர்கள். பந்தை உள்ளேயும், வெளியேவும் நகர்த்தும்போது, அது உங்களுக்கு வித்தியாசமான உணர்வைத் தரும்" என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY