செய்திகள் :

வக்ஃப் வாரிய மசோதாவுக்கு எதிராக திமுகவும் உச்சநீதிமன்றத்தில் மனு!

post image

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக திமுக சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்கள் நியமனம், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றுவோா் மட்டுமே வக்ஃப் சொத்துகளை அா்ப்பணிக்க முடியும் என்பது உள்ளிட்ட திருத்தங்களைக் கொண்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே தாக்கல் செய்யப்பட்டு, நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்குப் பிறகு மசோதாவில் சில திருத்தங்கள் மேற்கொண்டு பின்னர் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இரு நாள்களுக்கு முன்பாக குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில் இந்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றத்தில் இந்த மசோதாவுக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவத், மஜ்லிஸ் கட்சித் தலைவா் அஸாதுதீன் ஒவைஸி, ஆம் ஆத்மி தரப்பிலிருந்து எம்எல்ஏ அமனத்துல்லா கான், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைத் தொடர்ந்து திமுக தரப்பிலும் இன்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திமுக துணை பொதுச் செயலாளரும் மக்களவை திமுக கொறடாவுமான ஆ. ராசா, மனுவை தாக்கல் செய்துள்ளார். மேலும் மனுவில் முஸ்லீம்களின் உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக திமுக சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என்று பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது மக்களின் வயிறு எரிய வேண்டுமா? - முதல்வர் ஸ்டாலின்

நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது மக்களின் வயிறு எரிய வேண்டுமா? என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்படுவதாக... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி குறித்து வதந்தி பரவிய நிலையில் பள்ளிக்கல்வித்துறை தரப்பிலிருந்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கெனவே திட்ட... மேலும் பார்க்க

நெல்லையில் அறுந்துகிடந்த மின் கம்பியை மிதித்த ஆறு வயது சிறுவன் பலி!

சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து ஆறு வயது சிறுவன் பரிதாபமாக பலியானார்.இந்த சம்பவத்துக்கு, மின் ஊழியர்களின் கவனக் குறைவா? என்று துறை ரீதியிலான விசாரணை நடத்த முடிவு செ... மேலும் பார்க்க

ஆவடி காவல் ஆணையர் வாகனம் விபத்து: போக்குவரத்து புலனாய்வு காவல்துறை விசாரணை

சென்னை: சென்னை, ஆவடி காவல் ஆணையர் சங்கர் ஐபிஎஸ் சென்றுகொண்டிருந்த வாகனத்தின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் தீவிர வ... மேலும் பார்க்க

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரவில்லை: ரகுபதி

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று (ஏப். 7) சட்டப் பேரவை வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்... மேலும் பார்க்க

சீமான் இன்று ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட்!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி சரக டிஐஜி வருண் குமார் தொடர்ந்த வழக்கில் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.தன்னையும், தனது குடும்பத்தினரை... மேலும் பார்க்க