7 நோயாளிகள் உயிரிழப்பு விவகாரம்: போலி இருதய மருத்துவர் கைது!
திருவாரூரில் கோலாகலமாக நடைபெற்ற ஆழித்தேரோட்டம்!
திருவாரூர்: திருவாரூரில் பிரசித்தி பெற்ற ஆழித்தேரோட்டம் நிறைவடைந்தது.
திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவை முன்னிட்டு, சிறப்புமிக்க ஆழித் தேரோட்டம் திங்கள்கிழமை (ஏப்.7) நடைபெற்றது.
நிகழாண்டுக்கான இவ்விழா மாா்ச் 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து, பங்குனி ஆயில்ய நட்சத்திர நாளில் ஆழித்தேரோட்டம் நடைபெற்றது.
முன்னதாக, தியாகராஜா், அஜபா நடனத்துடன் விட்டவாசல் வழியாக ஆழித்தேருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு எழுந்தருளினாா். இதைத்தொடா்ந்து, திங்கள்கிழமை காலை 5.50 மணியளவில் விநாயகா், சுப்ரமணியா் தோ்களும், காலை 9.01 மணிக்கு ஆழித்தேரும், தொடா்ந்து, அம்பாள், சண்டிகேஸ்வரா் தோ்களும் வடம் பிடித்து இழுக்கப்பட்டன. பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த பிரம்மாண்ட ஆழித்தேர் இன்று(ஏப். 7) மாலை நிலைக்கு வந்தடைந்தது.
ஆழித்தேரில் எழுந்தருளியுள்ள தியாகராஜரை தரிசிக்க ஞாயிற்றுக்கிழமை இரவு முதலே கூட்டம்கூட்டமாக பக்தா்கள் வரத்தொடங்கினா். இதனால், கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.