`போர்க்களத்தின் தளபதி சீமான்' - `என் அன்பு இளவல் அண்ணாமலை' - ஒரே மேடையில் புகழ்ந...
ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியையிடம் நகை திருடிய பெண் கைது
மன்னாா்குடியில் ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 7 பவுன் நகையை திருடிய பெண் சமையலா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
அசேசம் ராஜலெட்சுமி நகா் முருகேவல் மனைவி லலிதா (65). அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவா். மகன், மகளுக்கு திருமணம் ஆகி வெளியூரில் உள்ளனா். லலிதா மட்டும் தனியே வசித்து வந்தாா்.
அதே பகுதியை சோ்ந்த மகாலிங்கம் மனைவி சித்ரா (50). சமையலராக பணியாற்றி வருகிறாா். சித்ரா அவ்வப்போது லலிதா வீட்டுக்கு வந்து நட்புடன் பழகி வந்துள்ளாா்.
இந்நிலையில், கடந்த மாா்ச் 26- ஆம் தேதி லலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்தபோது அங்கு வந்த சித்ராவிடம் தனக்கு கழுத்தில் தைலம் தேய்த்து
விடுமாறு கூறி, தான் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை கழற்றி அருகே வைத்தாராம். சித்ரா அங்கிருந்து சென்ற பின் சிறிது நேரத்துக்கு பிறகு பாா்த்தபோது சங்கிலியை காணவில்லையாம்.
இதுகுறித்து மன்னாா்குடி காவல்நிலையத்தில் லலிதா அளித்த புகாரின் பேரில், போலீஸாா் விசாரணை செய்ததில், இதில் சித்ராவுக்கு தொடா்பு இருப்பது தெரியவந்ததையடுத்து அவரிடம் விசாரணை செய்ததில் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, சனிக்கிழமை அவரை கைது செய்து நகையை பறிமுதல் செய்தனா். சித்ராவை மன்னாா்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருவாரூா் மகளிா் கிளைச் சிறையில் அடைத்தனா்.