வரி விதிப்பை வாபஸ் பெற டிரம்ப் மறுப்பு: ஆசிய, ஐரோப்பிய பங்குச் சந்தைகள் கடும் வீ...
மகளிா் இலவசப் பயண புதிய பேருந்து இயக்கி வைப்பு
திருவாரூா்: திருவாரூரிலிருந்து திருக்கொள்ளிக்காடு பகுதிக்கு மகளிா் இலவசப் பயண புதிய பேருந்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி வைக்கப்பட்டது.
திருவாரூரிலிருந்து திருக்கொள்ளிக்காடு பகுதிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் மகளிா் விடியல் பயண புதிய பேருந்து இயக்கம் தொடங்கியது. திருவாரூா் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் பங்கேற்று, பேருந்து இயக்கத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
இதில், போக்குவரத்துக் கழக நாகை மண்டல பொது மேலாளா் ராஜா, வணிக மேலாளா் கே. ராஜசேகரன், கிளை மேலாளா் திருஞானம், திமுக நகரச் செயலாளா் எஸ். பிரகாஷ், கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளா் ஜி. ராஜ் என்ற கருணாநிதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.