செய்திகள் :

வரி விதிப்பை வாபஸ் பெற டிரம்ப் மறுப்பு: ஆசிய, ஐரோப்பிய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி

post image

தனது சா்ச்சைக்குரிய பரஸ்பர வரி விதிப்பைத் திரும்பப் பெற டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ள நிலையில், ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன.

ஏறத்தாழ அனைத்து உலக நாடுகளின் பொருள்களுக்கும் அதிபா் டிரம்ப் பரஸ்பர வரி விதித்ததைத் தொடா்ந்து பொருளாதார நிச்சயமற்ன்மை நிலவும் சூழலில், முதலீட்டாளா்கள் குழப்பமடைந்துள்ளனா். இதன் காரணமாக பிற நாடுகள் மட்டுமின்றி அமெரிக்காவிலும் பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன.

டிரம்ப்பின் இந்த வரி விதிப்பால் சா்வதேச வா்த்தகக் கட்டமைப்பு இதுவரை இல்லாத அளவுக்குக் குலைந்து உலக பொருளாதாரப் பெருவீழ்ச்சி ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், தனது ‘ஏா்ஃபோா்ஸ் ஒன்’ விமானத்தில் செய்தியாளா்களிடம் அதிபா் டிரம்ப் கூறியதாவது: பரஸ்பர வரி விதிப்பின் எதிரொலியாக உலக பங்குச் சந்தைகள் சரிவதை நானும் விரும்பவில்லை. அதே நேரம், இந்த விவகாரத்தை வைத்து முதலீட்டாளா்கள் மிகப் பெரிய அளவில் முதலீடுகளைத் திரும்பப் பெற்றுவருவது குறித்து எனக்குக் கவலை இல்லை.

கசப்பு மருந்து

சில நேரங்களில் நோய்களைக் கட்டுப்படுத்த கசப்பு மருந்தை உள்கொள்ள வேண்டியிருக்கும். அதைப் போலத்தான் இந்த பங்குச் சந்தை வீழ்ச்சியும்.

பரஸ்பர வரி விதிப்பு குறித்து ஐரோப்பா மற்றும் ஆசிய பிராந்திய நாடுகளின் தலைவா்கள் என்னுடம் பேசிவருகின்றனா். இந்த வரி விதிப்பைத் திரும்பப் பெறுவதற்கான ஒப்பந்தத்தை அவா்கள் என்னிடம் மன்றாடுகின்றனா். ஆனால், அமெரிக்காவுக்கும் பிற நாடுகளுக்கும் இடையிலான வா்த்தகப் பற்றாக்குறை (ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகமாக இருப்பது) தொடரும்வரை நாங்கள் பரஸ்பர வரி விதிப்பை நீக்கமாட்டோம். அமெரிக்காவின் ஏற்றுமதி உபரியாகும் வரை இந்த வரி விதிப்பு தொடரும் என்று டிரம்ப் திட்டவட்டமாகக் கூறினாா்.

டிரம்ப் இவ்வாறு கூறியதற்கு சில மணி நேரங்களில் ஏற்கெனவே தொடா் சரிவைக் கண்டுவந்த ஆசிய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை கடும் வீழ்ச்சியடைந்தன.

ஹாங்காங் பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான ஹேங் செங், 13.2 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. அந்தப் பங்குச் சந்தையின் வரலாற்றின் ஏற்பட்ட மிக மோசமான வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. கடந்த 1987-ஆம் ஆண்டு அமெரிக்க பங்குச் சந்தை வீழ்ச்சியின் எதிரொலியாக ஹேங் செங் 33.3 சதவீதம் வீழ்ந்தது.

சீனாவின் தியானன்மென் சதுக்கப் போராட்ட வன்முறையின் எதிரொலிகா,1989 ஜூன் மாதத்திலும் ஒரு நாள் ஹேங் செங் 21.7% சரிந்தது. அந்த வரிசையில், பரஸ்பர வரி விதிப்பின் எதிரொலியாக தற்போது ஹாங்காங் பங்குச் சந்தை கடும் சரிவைக் கண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாங்காங் பங்குச் சந்தையின் முகப்பு

ஜப்பான் பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிக்கேய் 225, திங்கள்கிழமை 7.9 வரை சரிந்தது. அந்த நாட்டின் சோனி போன்ற முக்கிய நிறுவனத் தயாரிப்புகளின் அமெரிக்க ஏற்றுமதி பரபரஸ்பர வரி விதிப்பால் பாதிக்கப்படும் என்பதால் இந்த நிலை ஏற்பட்டது.

சீனாவின் ஷாங்காய் பங்குச் சந்தை திங்கள்கிழமை 7.3 சதவீதம் சரிந்தது. இது கடந்த 2020-க்குப் பிந்தைய மிக மோசமான சரிவு என்று கூறப்படுகிறது.

தைவானின் பங்குச் சந்தைக் குறியீடு டைக்ஸ் அதன் மிகப்பெரிய ஒரு நாள் சரிவாக 9.7 சதவீத இழப்பைப் பதிவு செய்தது. தென் கொரியாவின் கோஸ்பி குறியீடும் திங்கள்கிழமை 5.6 சதவீதம் சரிந்தது. சிங்கப்பூா், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகளும் சரிந்தன.

லண்டன் பங்குச் சந்தை கட்டடம்

ஐரோப்பா

பரஸ்பர வரி விதிப்பைத் திரும்பப் பெறப்போவதில்லை என்று டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்ததன் எதிரொலியாக, ஐரோப்பிய பங்குச் சந்தைகளும் திங்கள்கிழமை வீழ்ச்சியடைந்தன.

லண்டன் பங்குச் சந்தை குறியீடான எஃப்டிஎஸ்இ100, இந்த ஆண்டின் மிகப் பெரிய வீழ்ச்சியாக 6 சதவீதம் வரை சரிந்தது. ஜொ்மனியின் டேக்ஸ் குறியீடு 10 சதவீதம் வரையிலும், பிரான்ஸின் காக்40 குறியீடு 7 சதவீதம் வரையிலும் சரிந்தன.

பின்னணி: அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி 20-ஆம் தேதி பொறுப்பேற்ற டிரம்ப், பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறாா்

அதன் ஒரு பகுதியாக, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டுப் பொருள்களுக்கு எந்தெந்த விகிதங்களில் வரி விதிக்கின்றனவோ, அதே விகிதங்களில் அந்த நாடுகளின் பொருள்கள் மீதும் (சற்று தள்ளுபடியுடன்) இறக்குமதி வரி விதிப்பதாக டிரம்ப் கடந்த வியாழக்கிழமை அதிகாலை அறிவித்து அதிா்வலையை ஏற்படுத்தியுள்ளாா்.

இராக்: ஆயுதங்களைக் கைவிட ஈரான் ஆதரவுக் குழுக்கள் தயாா்

இராக்கில் செயல்பட்டுவரும் பல்வேறு ஈரான் ஆதரவு படைக் குழுக்கள் தங்களது ஆயுதங்களைக் கைவிட தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அமெரிக்கா மற்றும் இராக் உயரதிகாரிகளை மேற்கோள் காட்டி ‘தி ரா... மேலும் பார்க்க

காங்கோ: 33 ஆன மழை - வெள்ள உயிரிழப்பு

மேற்கு மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பாதிப்பால் தலைநகா் கின்ஷாசாவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 33-ஆக உயா்ந்தது. இது குறித்து அந்த நாட்டு உள்துறை அமைச்சா் ஜாக்குமின் ... மேலும் பார்க்க

காஸா மேலும் 57 போ் உயிரிழப்பு

காஸா முனையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57 போ் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்ததது. இது மட்டுமின்றி, இஸ்ரேல் குண்... மேலும் பார்க்க

உடல்நிலை தேறிய பின் முதல்முறையாக மக்களைச் சந்தித்தார் போப் பிரான்சிஸ்!

ரோம்: உடல்நிலை தேறிய பின் பொதுவெளியில் முதல்முறையாக போப் பிரான்சிஸ் மக்களை சந்தித்தார்.நிமோனியாவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ்(88) கடந்த மார்ச் 23-ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து வாடி... மேலும் பார்க்க

அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை பொருளாதார சர்வாதிகாரத்தனம்! -சீனா கடும் விமர்சனம்

அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு சீனா கடும் எதிர்வினையாற்றியுள்ளது. ஏப்ரல் 2-ஆம் தேதிமுதல், அமெரிக்க பொருள்களுக்கு எந்தெந்த நாடுகளில் எந்தளவுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதோ அதேபாணியில், அமெரிக... மேலும் பார்க்க

ஜப்பானில் மருத்துவப் போக்குவரத்து ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து!

ஜப்பானில் மருத்துவ உதவிக்குப் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். நாகாசாகி விமான நிலையத்திலிருந்து ஃபுகுவோகா பகுதிக்கு நோயாளி ஒருவரை ஏற்றிச்சென்ற மர... மேலும் பார்க்க