ஐபிஎல் போட்டிகளில் 2,500 ரன்களைக் கடந்த ருதுராஜ் கெய்க்வாட்!
ஜப்பானில் மருத்துவப் போக்குவரத்து ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து!
ஜப்பானில் மருத்துவ உதவிக்குப் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
நாகாசாகி விமான நிலையத்திலிருந்து ஃபுகுவோகா பகுதிக்கு நோயாளி ஒருவரை ஏற்றிச்சென்ற மருத்துவப் போக்குவரத்து ஹெலிகாப்டர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு கடலில் விழுந்ததாகக் கூறப்படுகின்றது.
கடலோர காவல்படையினர் இரு விமானங்கள், 3 கப்பல்களை அனுப்பி கடலில் மூழ்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 66 வயதான ஹெலிகாப்டர் பைலட், உதவியாளர், மருத்துவப் பணியாளர் ஆகியோர் இந்த விபத்தில் கடலோர காவல்படையினரால் காப்பாற்றப்பட்டனர்.
காப்பாற்றப்பட்ட மூவருக்கும் ஹைபோதெர்மியா எனப்படும் உடல் வெப்பநிலை குறைபாடு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இதில், தலைமை மருத்துவர், நோயாளி, பணியாளர் என 3 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்திற்கான உண்மையான காரணம் பற்றி விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.