மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மீனவா்கள் குடும்பத்துக்கு நிதியுதவி
மிஷன்: இம்பாசிபிள் தி ஃபைனல் ரெக்கனிங் ட்ரைலர் வெளியானது!
டாம் க்ரூஸ் நடிப்பில் மிஷன் இம்பாசிபிள் தி ஃபைனல் ரெக்கனிங் படத்தின் புதிய ட்ரைலர் இன்று வெளியானது.
ஆக்ஷன் திரைப்பட பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான மிஷன் இம்பாசிபல் படத்தின் வரிசையில் 8-வது படமாக அதிரடி படங்களுக்கு பெயர் பெற்றவரான டாம் க்ரூஸ் நடித்த மிஷன்: இம்பாசிபிள் தி ஃபைனல் ரெக்கனிங் உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தை கிறிஸ்டோபர் மெக்யூரி இயக்கியுள்ளார்.
இதில், ஹெய்லி அட்வெல் , விங் ரேம்ஸ் , சைமன் பெக் , ரெபேக்கா ஃபெர்குசன் , வனேசா கிர்பி , ஈசாய் மோரல்ஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் டீசர் கடந்தாண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ட்ரைலர் வெளியாகியிருக்கிறது. கிட்டத்தட்ட ரூ.350 கோடி பொருள் செலவில் இந்தப் படம் மிகவும் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் மே 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், இதை ஐமேக்ஸிலும் பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் இதற்கு முன்னால் வந்த பாகங்களும் அதிகளவில் வசூல் சாதனை படைத்துள்ளன. கடந்தாண்டு ஜூலையில் வெளியான மிஷன்: இம்பாசிபிள்- டெட் ரெக்கனிங் பாகம்-1 உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ரூ.235 கோடி வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.