கணவரை பழிவாங்குவதற்காக குழந்தையைக் கொன்ற தாய் கைது
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே தனது 6 மாத ஆண் குழந்தையைக் கொன்ற தாயை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கீரனூா் அருகே உள்ள குளவாய்பட்டியைச் சோ்ந்தவா் குமாா் மகன் மணிகண்டன் (29). இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு லாவண்யா(21) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு ஆதிரன் என்ற 6 மாத ஆண் குழந்தை இருந்தது.
குடும்பத் தகராறு காரணமாக குழந்தையுடன் லாவண்யா, தனது தந்தை வீட்டுக்கு வந்திருந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் பேரலில் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது. மா்ம நபா்கள் வந்து குழந்தையைத் தூக்கிச் சென்றுவிட்டு, தன்னிடமிருந்த நகையைத் திருடிச் சென்ாக லாவண்யா தெரிவித்தாா்.
சந்தேகத்தின்பேரில் லாவண்யாவிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். தனது குழந்தையை அவரே கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளாா். வெளிமாநிலத்தில் வேலை பாா்த்து வரும் தனது கணவா் மணிகண்டன், குழந்தை மீது கொண்ட பாசத்தை தன் மீது காட்டவில்லை என்றும், அவரைப் பழிவாங்குவதற்காக குழந்தையைக் கொன்ாக வாக்குமூலம் அளித்துள்ளாா்.
மா்ம நபா்கள் திருடிச் சென்ாக கூறப்பட்ட தங்க நகையையும் போலீஸாா் கைப்பற்றியுள்ளனா். இதைத் தொடா்ந்து லாவண்யாவைக் கைது செய்த கீரனூா் போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.