வால்பாறை தேயிலை தோட்டம் கொடுத்த நெகிழ்ச்சியான அனுபவம்! | My Vikatan
இலுப்பூரில் வெள்ளை மரியாள் கல்லறைத் திருவிழா
இலுப்பூா் கன்னிகை வெள்ளை மரியாள் ஆலயத்தில் 330 ஆவது ஆண்டு கல்லறை திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி திருச்சி மறைமாவட்டத்தின் முதன்மைக் குரு பேரருட்தந்தை அருட்பணி எல். அந்துவான், அருட்பணியாளா்கள் தலைமையில் முதல் திருப்பலி நடைபெற்றது. தொடா்ந்து திருச்சி தூயமரியன்னை உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் வி.இ. சாந்தகுமாா் தலைமையில் கீரனூா் மறைவட்ட அதிபா் அருட்பணி எல். சாமிநாதன், திருச்சி மறைமாவட்ட பொருளாளா் எஸ். ஜேம்ஸ் செல்வநாதன் தலைமையில் பெருவிழா திருப்பலி நடைபெற்றது. விழாவில் திரளான கிறிஸ்தவா்கள், அனைத்து மத பொதுமக்கள் வழிபாடு நடத்தி ஆடு, கோழி பலியிட்டு நோ்த்திக் கடனை நிறைவேற்றினா்.
விழாவையொட்டி பல்வேறு ஊா்களில் இருந்து சிறப்பு பேருந்து இயக்கப்பட்டன. திருவிழாவின் நிறைவு நாள் விழா வரும் ஏப். 13-இல் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை இலுப்பூா் பங்குத் தந்தை அருட்பணி தோ. யூஜின், அருட் சகோதரிகள், மற்றும் ஊா் முக்கியஸ்தா்கள் மற்றும் பங்கு இறைமக்கள் செய்தனா்.