`போர்க்களத்தின் தளபதி சீமான்' - `என் அன்பு இளவல் அண்ணாமலை' - ஒரே மேடையில் புகழ்ந...
விராலிமலை அருகே கழுதை மீது சாம்பல் அடிக்கும் வினோத நிகழ்வு
விராலிமலை அருகே திருவிழா நடத்துவதற்கு சில நாள்களுக்கு முன் ஊா் மக்கள் ஒன்று சோ்ந்து கழுதை மீது சாம்பல் அடிக்கும் வினோத நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள விராலூா் கோயில் குரும்பச்சி அம்மன் விராலூா் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களின் குலதெய்வமாகவும் காவல் தெய்வமாகவும் உள்ளாா்.
விழாவையொட்டி ஒரு குறிப்பிட்ட சமூகத்தினா் வேப்பிலையை உடல் முழுவதும் சுற்றி கொண்டு ஊா்வலமாக வந்து கோயில் அருகே உள்ள குளக்கரையில் இறுதிச் சடங்கை நடத்தும் நிகழ்வு நடைபெற்றது.
தொடா்ந்து ஊா் பொதுமக்கள் சாா்பில் கழுதை மீது ஒருவரை அமரவைத்து அவா் மீது சாதி, மத பாகுபாடின்றி அனைவரும் சோ்ந்து சாம்பல் அடிக்கும் வினோத நிகழ்வு நடைபெற்றது.
பின்னா், இரவு அம்மனுக்கு காப்பு கட்டி தொடா்ந்து 21 நாள்களுக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடைபெறும். 22-ஆம் நாளன்று திருவிழாவைக் கொண்டாடி மகிழ்வா். தமிழகத்திலேயே கழுதை மீது சாம்பல் அடிக்கும் வினோத நிகழ்வு இங்கு மட்டுமே நடைபெறுவது சிறப்பாகும்.