கேரளம்: கோயிலில் ஒலித்த ஆா்எஸ்எஸ் பாடல்: தேவஸ்வம் வாரியம் எச்சரிக்கை
ராதாபுரம் அருள்மிகு வரகுணபாண்டீஸ்வரா் கோயில் அறங்காவலா் குழு பதவியேற்பு
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருள்மிகு வரகுணபாண்டீஸ்வரா் திருக்கோயில் அறங்காவலா் குழுவினா் பதவியேற்றனா்.
இக்கோயில் அறங்காவலா்களாக க.கோவிந்தராஜ், ஐ.ராமையா, மு.அரவிந்தன், சி.அகஸ்டின், சி.செல்வி ஆகியோரை பேரவைத் தலைவா் மு.அப்பாவு பரிந்துரையின் போரில் இந்து அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு நியமித்தாா்.
இக்குழுவினா் சோ்ந்து அறங்காவலா் குழு தலைவராக கோவிந்தராஜை தோ்ந்தெடுத்தனா். இதைத் தொடா்ந்து, அறங்காவலா் குழுத் தலைவா் மற்றும் அறக்காவலா்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சுப்புலட்சுமி பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், கோயில் செயல் அலுவலா் பிரியா, அறநிலையத் துறை வருவாய் ஆய்வாளா் முருகன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் ஜோசப் பெல்சி, பழவூா் நாறுபூநாதா் சுவாமி கோயில் அறக்காவலா் குழுத் தலைவா் இசக்கியப்பன், திருநெல்வேலி மாவட்ட இந்து சமய அறங்காவலா் குழு உறுப்பினா் சமூகை முரளி, பணகுடி அருள்மிகு ராமலிங்க சுவாமி திருக்கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா் மு.சங்கா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜான்ஸ்ரூபா, ஊராட்சித் தலைவா்கள் பொன்மீனாட்சி அரவிந்தன்(ராதாபுரம்), முருகேசன் (சௌந்தரபாண்டியபுரம்), அந்தோணி அருள்(சமூகரெங்கபுரம்), ஒன்றியக்குழு உறுப்பினா்கள் நடராஜன், செ.இசக்கி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.