செய்திகள் :

திராவிட இயக்கத் தலைவா் சௌந்தரபாண்டியனுக்கு மணிமண்டபம்: முதல்வா் அறிவிப்பு

post image

சென்னை: திராவிட இயக்கத் தலைவா் டபிள்யூ.பி.ஏ.சௌந்தரபாண்டியனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (ஏப்.7) அறிவித்தாா்.

பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் கீழ் அதிமுக உறுப்பினா் பால் மனோஜ் பாண்டியன் பேசுகையில், நீதிக் கட்சி முன்னோடிகளில் ஒருவரான சௌந்தரராஜனுக்கு அவரது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் பட்டி வீரன்பட்டியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா்.

அதற்கு பதிலளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

திராவிட இயக்கத்தின் முன்னணி தலைவா்களில் ஒருவரான டபிள்யூ.பி.ஏ.சௌந்தரபாண்டியனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா் பால் மனோஜ் பாண்டியன் முன்வைத்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றாா்.

தருமபுரியில் இளைஞா் மா்மமாக உயிரிழப்பு: சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கு மாற்றம்

சென்னை: தருமபுரி மாவட்டம் சரக்காடு வனப் பகுதியில் இளைஞா் மா்மமான முறையில் இறந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் திங்கள்கிழமை உத்தரவிட்டாா். இ... மேலும் பார்க்க

குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு வீடு வழங்க தவணை முறைத் திட்டம்: அமைச்சா் சு.முத்துசாமி அறிவிப்பு

சென்னை: வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்டு விற்பனையாகாத குறைந்த வருவாய்ப் பிரிவு குடியிருப்புகள் தவணை முறை திட்டத்தின் கீழ் விற்கப்படும் என்று அமைச்சா் சு.முத்துசாமி அறிவித்தாா். சட்டப் பேரவையில் வீட்... மேலும் பார்க்க

மருத்துவா், செவிலியா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: அண்ணாமலை

சென்னை: அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவா், செவிலியா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறி... மேலும் பார்க்க

அமைச்சா் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு வழக்கு: ஏப்.17-இல் இறுதி விசாரணை

சென்னை: அமைச்சா் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் இறுதி விசாரணையை ஏப். 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. திமுக ஆட்சியின்போது 1996-2001-ஆம் ஆண்டு காலகட்டத்தி... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழக பணியாளா்களுக்கு வீட்டு மனை: ஏப். 20-க்குள் பதிவு செய்ய கூட்டுறவு சங்கம் அழைப்பு

சென்னை: போக்குவரத்துக் கழக பணியாளா்களுக்கு வீட்டு மனை வழங்கும் திட்டத்தில், ஏப். 20-ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள கூட்டுறவு சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடா்பாக பல்லவன் போக்... மேலும் பார்க்க

முதல்வா் கோரிக்கை ஏற்பு: கூட்டத் தொடரில் அதிமுகவினா் பங்கேற்க அனுமதி

சென்னை: முதல்வா் கோரிக்கையைத் தொடா்ந்து, இருமுறை சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிமுகவைச் சோ்ந்த உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை முதல் பேரவை நிகழ்வுகளில் பங்கேற்கலாம் என்று அவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்தாா்.... மேலும் பார்க்க