7 நோயாளிகள் உயிரிழப்பு விவகாரம்: போலி இருதய மருத்துவர் கைது!
LPG: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்வு; மோடி அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை, மத்திய அரசு ரூ. 50 உயர்த்தியிருக்கிறது.
மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியின் அறிவிப்பின்படி, நாளை (ஏப்ரல் 8) முதல் இது நடைமுறைக்கு வருகிறது.
அதன்படி, உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கான 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர் ரூ. 503லிருந்து ரூ.553-ஆகவும், உஜ்வாலா திட்டத்தின்கீழ் வராத பொதுப் பயனாளிகளுக்கான 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர் ரூ. 803-லிருந்து ரூ. 853-ஆகவும் விலை உயரும்.

மத்திய அரசின் இந்த விலையுயர்வுக்குப் பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
அந்த வரிசையில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, "உலகெங்கும் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. நியாயமாகப் பார்த்தால் பெட்ரோலியப் பொருள்களின் விலை குறைக்கப்படவேண்டும்.
ஆனால், இந்தப் பகல்கொள்ளை பா.ஜ.க அரசாங்கம் விலையை உயர்த்தி, ஏழை எளிய நடுத்தர மக்களின் வயிற்றில் அடிக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 26 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுக்கிறது.
உலகெங்கும் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது.நியாயமாகப் பார்த்தால் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைக்கப்படவேண்டும். ஆனால் இந்த பகல்கொள்ளை பாஜக அரசாங்கம் விலையை உயர்த்தி ஏழை எளிய,நடுத்தர மக்களின் வயிற்றில் அடிக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 26 லட்சம் கோடி… pic.twitter.com/4lUDj75UDa
— Jothimani (@jothims) April 7, 2025
கச்சா எண்ணெய் விலை உச்சத்திலிருந்தபோது கூட , காங்கிரஸ் ஆட்சியில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 450தான். ஆனால், இன்று ரூ. 1000 ஆகிவிட்டது. பெட்ரோல், டீசல் விலையும் இருமடங்காகிவிட்டது.
இத்துடன் கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு மற்றும் வேலைவாய்ப்பின்மை. நரேந்திர மோடி ஆட்சியில் சாதாரண மக்கள் நிம்மதியாக வாழவே முடியாது" என்று பதிவிட்டிருக்கிறார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது ட்விட்டர் பக்கத்தில், "மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த 2014ம் ஆண்டு முதல், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் 410 ரூபாயில் இருந்து தொடர்ந்து உயர்ந்து கொண்டே போய் தற்போது ரூ 820 என்ற அளவில் உயர்ந்துள்ளது.
தினசரி பயன்படுத்தும் அத்தியாவசிய தேவையான காஸ் சிலிண்டர் விலையை இன்று ரூபாய் 50 என்ற அளவில் உயர்த்தி அடித்தட்டு மக்களில் தலையில் இடியை இறக்கியுள்ளது ஒன்றிய பாஜக அரசு.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த 2014ம் ஆண்டு முதல், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் 410 ரூபாயில் இருந்து தொடர்ந்து உயர்ந்து கொண்டே போய் தற்போது ரூ 820 என்ற அளவில் உயர்ந்துள்ளது. தினசரி பயன்படுத்தும் அத்தியாவசிய தேவையான காஸ் சிலிண்டர் விலையை இன்று ரூபாய் 50 என்ற அளவில் உயர்த்தி…
— Selvaperunthagai K (@SPK_TNCC) April 7, 2025
மேலும், வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் ஏழை, எளிய மக்களின் துயரத்தைக் கண்டுகொள்வதே இல்லை.
நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வரும் சூழலில், காஸ் சிலிண்டர் விலையையும் ஒன்றிய பாஜக அரசு உயர்த்தியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs