டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ.85.82-ஆக முடிவு!
யார் அந்த தியாகி: "அவருக்கு பட்டம் கொடுத்த நீங்கதான் சொல்லணும்" - TASMAC வழக்கில் CM-க்கு EPS பதிலடி
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (ஏப்ரல் 7) நடைபெற்ற கூட்டத்தில், டாஸ்மாக் வழக்கு தொடர்பாக `யார் அந்த தியாகி?' என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பினார்.
ஆனால், சட்டமன்றத்தில் தொடர்ந்து பேச அனுமதிக்கப்படாததால், செங்கோட்டையனைத் தவிர, எடப்பாடி பழனிசாமி உட்பட அ.தி.மு.க அனைத்து எம்.எல்.ஏ-க்களும், 'யார் அந்த தியாகி?', 'டாஸ்மாக் ஊழலுக்குப் பொறுப்பேற்று ஸ்டாலின் அரசே பதவி விலகு' என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாறு அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

அவர்கள் சென்றபிறகு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், ``தான் சிக்கியிருக்கக்கூடிய பல்வேறு வழக்குகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக யாருடைய காலில் விழுந்தாரோ... விழுந்த நேரத்தில் நொந்து நூடுல்ஸ் ஆகியிருக்கும் அதிமுக தொண்டர்கள்தான் இன்றைக்குத் தியாகிகளாக இருக்கிறார்கள்.
முதலமைச்சர் பதவியை வாங்குவதற்காக யாருடைய காலில் விழுந்தாரோ அந்த அம்மையார்தான் இன்றைக்குத் தியாகியாக இருக்கிறார்" என்று கடுமையாக விமர்சித்தார்.
இந்த நிலையில், ஸ்டாலினின் இத்தகைய பேச்சுக்கு எதிர்வினையாற்றியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, ``யார் அந்த தியாகி என்ற கேள்விக்குப் பதில் சொல்லத் திராணியில்லாத ஸ்டாலின் சம்பந்தமே இல்லாத ஒரு பதிலை அளித்துள்ளார்.
சிட்டி பாபுவில் ஆரம்பித்து, தா. கிருட்டிணன், சாதிக் பாட்சா எனப் பல்வேறு தியாகிகளை வரிசையாகக் கூற முடியும். உங்கள் குடும்பத்தில் செல்வாக்கு யாருக்கு அதிகம் என்ற போட்டியில் எரித்துக் கொல்லப்பட்டு, தியாகிகள் ஆக்கப்பட்ட அப்பாவி தினகரன் ஊழியர்களை நினைவிருக்கிறதா?
#யார்_அந்த_தியாகி என்ற கேள்விக்கு பதில் சொல்லத் திராணியில்லாத திரு. @mkstalin, சம்மந்தமே இல்லாத ஒரு பதிலை அளித்துள்ளார்.
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) April 7, 2025
சிட்டி பாபுவில் ஆரம்பித்து, தா. கிருட்டிணன், சாதிக் பாட்சா என பல்வேறு தியாகிகளை வரிசையாக கூற முடியும்.
உங்கள் குடும்பத்தில் செல்வாக்கு யாருக்கு அதிகம் என்ற… pic.twitter.com/qWss5KnypZ
இவ்வளவு ஏன், கனவிலும் திமுக-வில் தலைவராகவோ, முதல்வராகவோ உங்கள் குடும்பத்தை மீறி யாரும் எந்த பதவியிலும் வர முடியாது எனத் தெரிந்தும்,
நீண்ட நாள்களாகத் தாங்கள் சுரண்டப்படுகிறோம் - கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறோம் என அறிந்தும், திமுக-வில் தொடர்ந்து இருக்கும் தொண்டர்கள்தான் தியாகிகள்.
ஆனால், நாங்கள் கேட்ட கேள்வி அதுவல்ல. டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை சொல்லியிருக்கிறதே, அந்த ஊழலுக்குப் பொறுப்பான அந்த தியாகி யார் என்றுதான் கேட்கிறோம். அவருக்குத் தியாகி பட்டம் கொடுத்த நீங்கள்தான் அந்த கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும் ஸ்டாலின்" என்று எக்ஸ் தளத்தில் சாடியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs