செய்திகள் :

காயத்திலிருந்து குணமடைந்த பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள்!

post image

பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் கிரிக்கெட் விளையாட தயாராகி வருகிறார்கள்.

பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஃபகர் ஸமான் மற்றும் சைம் ஆயூப் இருவரும் காயம் காரணமாக நீண்ட நாள்களாக பாகிஸ்தான் அணியில் இடம்பெறாமலிருந்தனர். இவர்கள் இருவரும் அணியில் இல்லாதது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அண்மையில், நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற தொடர்களிலும் இவர்கள் இருவரும் விளையாடவில்லை.

இதையும் படிக்க: ஐபிஎல்-லிருந்து எப்போது ஓய்வு? மனம் திறந்த எம்.எஸ்.தோனி!

மீண்டும் கிரிக்கெட்

காயத்திலிருந்து குணமடைந்துள்ள பாகிஸ்தான் அணியின் இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களும் மீண்டும் கிரிக்கெட் விளையாட தயாராக இருப்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் வருகிற ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. ஃபகர் ஸமான் மற்றும் சைம் ஆயூப் இருவரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடத் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடுவதற்காக பெஷாவர் ஸல்மி அணியின் பயிற்சி முகாமில் சைம் ஆயூபும், லாகூர் அணியின் பயிற்சி முகாமில் ஃபகர் ஸமானும் இணைந்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தகவலறிந்த கிரிக்கெட் வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பாகிஸ்தான் அணி சரியாக செயல்படாததற்கு ஐபிஎல் தொடர் காரணமா? முன்னாள் கேப்டன் சொல்வதென்ன?

அண்மையில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி, அந்த அணிக்கு எதிரான டி20 தொடரை 1-4 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கிலும் இழந்தது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களுடன் அடிதடி: பாகிஸ்தான் வீரரை தரதரவென இழுத்துச் சென்ற பாதுகாவலர்!

ரசிகர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்களை தாக்க முயன்ற பாகிஸ்தான் வீரரை பாதுகாவலர் தரதரவென இழுத்துச் சென்ற விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் ... மேலும் பார்க்க

இங்கிலாந்து டி20, ஒருநாள் அணியின் புதிய கேப்டன் ஹாரி புரூக்!

இங்கிலாந்து டி20, ஒருநாள் அணியின் கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றில் தொடர்ச்சியாக தோல்வியைத் தழு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அணி சரியாக செயல்படாததற்கு ஐபிஎல் தொடர் காரணமா? முன்னாள் கேப்டன் சொல்வதென்ன?

ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடாததே அந்த அணி சர்வதேசப் போட்டிகளில் சரியாக செயல்படாததற்கு முக்கிய காரணம் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரஷித் லாட்டிஃப் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடர் கடந்த ... மேலும் பார்க்க

இளம் வயதில் ஜெய்ஸ்வால் இப்படி முடிவெடுக்கலாமா? முன்னாள் இந்திய வீரர் கூறுவதென்ன?

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் பேசியுள்ளார்.இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்திய அணிக்காக டி2... மேலும் பார்க்க

மும்பையை வென்றது லக்னௌ

ஐபிஎல் கிரிக்கெட்டில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.முதலில் லக்னௌ 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் எடுக்க, மும்பை 20 ஓவ... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் விலகுகிறாரா?

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து பிரபல இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஆலி ஸ்டோன் விலக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர... மேலும் பார்க்க