7 நோயாளிகள் உயிரிழப்பு விவகாரம்: போலி இருதய மருத்துவர் கைது!
போபால்: போலி இருதய சிகிச்சை நிபுணரிடம் சிகிச்சை பெற்ற 7 நோயாளிகள் உயிரிழந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள டாக்டர் நரேந்திர ஜான் கேம் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் இருந்த ஜான் கேமை மத்திய பிரதேச கவல் துறை அதிகாரிகள் கைது செய்திருப்பதாக இன்று(ஏப். 4) தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து, அவர் மத்திய பிரதேசத்தின் தாமோவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.