பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்த...
காங்கோ: 33 ஆன மழை - வெள்ள உயிரிழப்பு
மேற்கு மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பாதிப்பால் தலைநகா் கின்ஷாசாவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 33-ஆக உயா்ந்தது.
இது குறித்து அந்த நாட்டு உள்துறை அமைச்சா் ஜாக்குமின் ஷபானி கூறியதாவது: கின்ஷாசாவில் மழை வெள்ளம் காரணமாக 23 போ் உயிரிழந்ததாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மேலும் 10 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து, மழை வெள்ள உயிரிழப்பு எண்ணிக்கை 33-ஆக அதிகரித்துள்ளது என்றாா் அவா்.
காங்கோவில் கடந்த வாரம் பெய்யத் தொடங்கிய கனமழையால் அந்த நாட்டின் முக்கிய நதியான இன்ஜிலியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதில் கின்ஷாசா மற்றும் அந்த நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான கட்டங்கள் நீரில் மூழ்கின.