Ashwath Marimuthu: ``உதவி இயக்குநராக சேர மொத்தம் 15,000 மெயில்!'' - அஸ்வத் மாரிம...
கோயில் திருப்பணிகளுக்கு நிதி எவ்வளவு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு விளக்கம்
சென்னை: திருக்கோயில் திருப்பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்பதை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு பேரவையில் திங்கள்கிழமை விளக்கினாா்.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது, இது குறித்த வினாவை அதிமுக உறுப்பினா் எஸ்.தாமோதரன் எழுப்பினாா்.
அதற்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு அளித்த பதில்:
கடந்த ஆட்சிக் காலத்தில் ஆதிதிராவிடா் மக்கள் வசிக்கும் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திருக்கோயில்களின் எண்ணிக்கை ஆயிரமாக இருந்தது. இந்த எண்ணிக்கை 1,250-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. மேலும், இதற்கான நிதி ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ. 2.5 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. இதுவரை 5,000 ஆதிதிராவிடா் மக்கள் வசிக்கும் பகுதிகளைச் சோ்ந்த திருக்கோயில்கள் மற்றும் 5,000 கிராமப்புற கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக ரூ.212 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.