உடல்நிலை தேறிய பின் முதல்முறையாக மக்களைச் சந்தித்தார் போப் பிரான்சிஸ்!
இளம் வயதில் ஜெய்ஸ்வால் இப்படி முடிவெடுக்கலாமா? முன்னாள் இந்திய வீரர் கூறுவதென்ன?
இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் பேசியுள்ளார்.
இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்திய அணிக்காக டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஜெய்ஸ்வால், உள்ளூர் போட்டிகளில் மும்பை அணியிலிருந்து விலகி கோவா அணிக்காக விளையாடவுள்ளதாக அண்மையில் தெரிவித்தது கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையும் படிக்க: கொஞ்சம் கொஞ்சமாக தகர்கிறதா சிஎஸ்கேவின் கோட்டை?
வாசிம் ஜாஃபர் கூறியதென்ன?
உள்ளூர் போட்டிகளில் மும்பை அணியிலிருந்து விலகி கோவா அணிக்காக விளையாடவுள்ளதாக ஜெய்ஸ்வால் எடுத்துள்ள முடிவு ஆச்சரியமளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கோவா அணியில் எந்த பொறுப்பு அளிக்க முன்வந்தாலும், மும்பை அணியை விட்டு ஜெய்ஸ்வால் விலகக் கூடாது. அதுவும் குறிப்பாக, இந்த இளம் வயதில் (23 வயது) அவர் அணியை விட்டு விலகுவது சரியான முடிவு கிடையாது. 34-35 வயதில் ஒருவர் இந்த முடிவை எடுத்தால் அதில் பெரிதாக எந்த ஒரு பிரச்னையும் இல்லை. மும்பை அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாகவே ஜெய்ஸ்வால் இந்த முடிவை எடுத்துள்ளதாக நினைக்கிறேன். ஆனால், மும்பை அணியை விட்டு விலகுவது என்ற அவரது முடிவு அதிர்ச்சியளிக்கிறது.
இதையும் படிக்க: சிலரால் மட்டுமே இதனை செய்ய முடியும்; ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு சந்தீப் சர்மா பாராட்டு!
மும்பை அணிக்காக 14 வயதுக்கு முன்பிலிருந்து தற்போது வரை விளையாடியுள்ள ஒருவர் இந்த முடிவை எடுத்துள்ளது ஆச்சரியமளிக்கிறது. மிக விரைவில் இந்த முடிவை அவர் எடுத்துவிட்டதாக நினைக்கிறேன். அவர் ரஞ்சி போட்டிகளில் விளையாடுவதை இலக்காக வைத்துக்கொள்ளக் கூடாது. இந்திய அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்பதே அவருடைய இலக்காக இருக்க வேண்டும் என்றார்.