'பிசினஸ் தொடங்கப் போறீங்களா?' - இந்த 10 கேள்விகளுக்கு பதில் ப்ளீஸ்!
பிசினஸ் - சட்டென எடுக்கும் ஒரு முடிவு அல்ல.
பிசினஸ் தொடங்குவதாக முடிவு எடுத்தால் அதற்காக பக்காவாக நம்மை நாமே தயார் செய்துகொள்ள வேண்டும். அதற்கு உங்களை நீங்களே கேட்டுகொள்ள வேண்டிய 10 கேள்விகளை சொல்கிறார் See Change நிறுவனத்தின் தலைவர் மற்றும் MSME நிபுணர் ஆனந்த்.
என்ன பிசினஸ், அது யாருக்காக? அவர்களின் எந்த தேவையை நம் பிசினஸ் நிறைவேற்றும்? என்கிற தெளிவான பிசினஸ் ஐடியா.
நீங்கள் செய்யப்போகும் பிசினஸிற்கு மார்க்கெட் உள்ளதா? யார் போட்டியாளர்கள்? உங்களுடைய வாடிக்கையாளர்கள் யார்? - மார்க்கெட் ஆராய்ச்சி தேவை.

நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள்? அடுத்த பத்து ஆண்டிற்குள் நீங்கள் எதை அடைந்திருக்க வேண்டும்? - பிசினஸிற்கு நோக்கம் கட்டாயம் இருக்க வேண்டும்.
வருமானம் எப்படி சம்பாதிக்க போகிறீர்கள்? என்ற பிசினஸ் மாடல் குறித்து உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
அனைத்து துறைகளிலும் சந்தையில் பல பல கடைகள், நிறுவனங்கள் உள்ளது. அவர்களிடம் இருந்து நீங்கள் எப்படி மாறுபடுகிறீர்கள் என்பதை பாருங்கள். USP மிக மிக முக்கியம்.
GST, FSSAI, MSME, Trademark போன்ற பதிவுகளை பக்காவாக செய்துவிட்டீர்களா?
நீங்கள் கேட்க வேண்டிய முக்கிய மற்றும் கட்டாய கேள்வி - ஆரம்ப முதலீடு எவ்வளவு? அது எப்படி புரட்டப்போகிறோம்?
வாடிக்கையாளருக்கு நம் மீது மதிப்பை ஏற்படுத்துவது நம்முடைய பிராண்டிங், பேக்கேஜிங் மற்றும் மார்க்கெட்டிங் - அது எப்படி இருக்கப்போகிறது?
வலைதளம், சமூக வலைதளம், CRM, Automation Tools ஆகியவை தயாரா?
செயலாக்க திட்டம் என்ன? அதை எப்படி செய்யப்போகிறோம்?
இந்தக் கேள்விகளுக்கு பக்கா பதில்கள் கிடைத்துவிட்டால்... அப்புறம் என்ன... போலாம் ரைட்!