'பட்டிமன்றம் பேசுறதுக்கான தகுதி எனக்கு இல்லேன்னு நம்பினேன்' - பட்டிமன்றம் ராஜா |...
கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்குப் புவிசார் குறியீடு; அடுத்து எவற்றுக்கு?
குறிப்பிட்ட ஒரு ஊரில் உள்ள சிறப்பு மிக்க தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்குகிறது.
இதன் மூலம் அந்த பொருளும் ஊரும் சிறப்படைகிறது. மேலும், குறிப்பிட்ட அந்த பொருட்களின் வர்த்தகம் அதிகரிக்கிறது.
அந்த பொருள் போலியாக வேறு பெயர்களில் விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.
குறிப்பாக தஞ்சாவூர் கலைத்தட்டு, சேலம் சுங்குடி சேலை, காஞ்சி பட்டு, மதுரை மல்லிகை, திண்டுக்கல் பூட்டு, கோவில்பட்டி கடலை மிட்டாய் உள்ளிட்ட சுமார் 62 பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வெற்றிலை, குமரி மாவட்டம் தோவாளை மாணிக்க மாலைக்குப் புவிசார் குறியீீடு கிடைத்துள்ளது.
கும்பகோணம் வெற்றிலை குறித்து தமிழ் சினிமாவில் பல பாடல்கள் வெளிவந்துள்ளன. கும்பகோணத்தில் அடையாளங்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது.
பல ஊர்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெற்றிலையில் மட்டும் தினமும் குறிப்பிட்ட தொகை வர்த்தகம் நடைபெறுவதாக வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில், கும்பகோணம் வெற்றிலைக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
இது குறித்து அறிவு சார் சொத்துரிமை சிறப்பு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 13ம் தேதி, தமிழ்நாடு வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இருந்து கும்பகோணம் வெற்றிலை உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் கும்பகோணம் வெற்றிலைக்கும்,
தமிழ்நாடு கைவினைப்பொருட்கள் மேம்பாட்டு கழகம் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் மூலம் தோவாளை மாணிக்க மாலை கைவினை கலைஞர்கள் நலசங்கம் சார்பில் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. அதன்படி நவம்பர் மாதம் மத்திய அரசு அரசிதழில் வெளியிடப்பட்டது.

இதையடுத்து, சட்ட விதிப்படி நான்கு மாதங்கள் முடிவடைந்து நிலையில், தற்போது புவிசார் குறியீடு கிடைக்க பெற்றுள்ளது. தமிழகத்தில் இதுவரை 62 பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 பொருட்களுக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளன. சீரக சம்பா அரிசி, பேராவூரணி தேங்காய், தஞ்சாவூர் கண்ணாடி வேலைப்பாடு, நாதவஸ்வரத்தில் உள்ள சீவாலி உள்ளிட்ட பொருட்களுக்கு விரைவில் புவிசார் குறியீடு கிடைக்க இருக்கின்றன என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs