வக்ஃப் பெயரில் வாக்கு வங்கி அரசியல்: அமித் ஷா
வக்ஃப் சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் இஸ்லாமியர்கள் அச்சுறுத்தப்படுவார்கள் என்று எதிர்க்கட்சியினர் வாக்குவங்கி அரசியல் செய்வதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.
வக்ஃப் விவகாரங்களில் அரசின் தலையீடு இருக்காது என்றும், இது பின்னோக்கிய விளைவுகளை ஏற்படுத்தாது எனவும் அமித் ஷா குறிப்பிட்டார்.