செய்திகள் :

ஜார்க்கண்ட்: பிகார் அரசினால் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் கைது!

post image

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.1 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த நக்சல் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பலாமு மாவட்டத்தின் துரிக்தார் மலைப்பகுதியில் மாவோயிஸ்டு அமைப்பின் கிளையான திரித்தியா சம்மேளன் பரஸ்துத்தி ஆணையம் எனும் இயக்கத்தைச் சேர்ந்த ஜிப்லால் யாதவ் என்பவரை நேற்று (ஏப்.2) காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இதையும் படிக்க:நில எடுப்பு விவகாரம்: ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

இந்நிலையில், பிகாரின் காயா மாவட்டத்தின் ஹதி கிராமத்தைச் சேர்ந்த நக்சலான யாதவ் மக்களிடம் மிரட்டி பறிக்கப்பட்ட பணத்தை பெறுவதற்காக ஜார்க்கண்ட் வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அவரைப் பிடிக்க பிகார் மாநில அரசு ரூ.1 லட்சம் வெகுமதி அறிவித்து அவரை தேடி வந்துள்ளது.

முன்னதாக, திரித்தியா சம்மேளன் பரஸ்துத்தி ஆணையம் எனும் மாவோயிஸ்டு படையைச் சேர்ந்த அவர், சசிகாந்த் என்பவரின் கீழ் நக்சலாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: வக்ஃபு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்தும், அதை திரும்பப் பெறக் கோரியும் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈட... மேலும் பார்க்க

மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா: முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடக்கம்!

மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவானது மிகவும் பிரசிதி பெற்றதாகும். 15 நாள்கள் திருவிழாவான சித்திரை... மேலும் பார்க்க

கேட்பாரின்றி கிடந்த 500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்: ரயில்வே போலீசார் விசாரணை

சென்னை விம்கோ நகர் ரயில்வே நடைமேடையில் கேட்பாரின்றி கிடந்த 500 கிலோ ரேசன் அரிசி ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.சென்னை விம்கோ நகர் ரயில்வே நடைமேடையில் கொருக்குப்பேட்டை ரயில்... மேலும் பார்க்க

ரயிலிலிருந்து தவறி விழுந்து இளைஞர் பலி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே ரயிலில் பயணித்த இளைஞர் வெள்ளிக்கிழமை தவறி விழுந்ததில் பலியானார். கன்னியாகுமரி மாவட்டம், அழகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாமணி மகன் ஜார்ஜ் நெல்சன... மேலும் பார்க்க

கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 300 கன அடி நீர் திறப்பு அதிகரிப்பு!

திருவள்ளூர்: சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆந்திரத்தின் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் 300 கன அடியாக அதிகரித்துள்ளதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்ந்... மேலும் பார்க்க

பழம்பெரும் நடிகர் மனோஜ் குமார் மறைவு: பிரதமர் இரங்கல்

மும்பை: ஹிந்தி திரையுலகின் ஜாம்பவானும் பழம்பெரும் நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான மனோஜ் குமார்(87) உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை அதிகாலை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது... மேலும் பார்க்க