டிரம்ப்புக்கு சீனா பதிலடி: அமெரிக்க பொருள்கள் மீது 34% கூடுதல் வரி
KKR vs SRH: 'என் அணி வீரர்களிடம் இதைதான் சொன்னேன்'- வெற்றி குறித்து ரஹானே
நேற்று(ஏப்ரல் 4) நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணியும், சன்ரைசர்ஸ் அணியும் மோதின. இதில் ஹைதரபாத் அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றிருக்கிறது.
இந்நிலையில் அணியின் வெற்றி குறித்து கேப்டன் ரஹானே சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். போட்டிக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ரஹானே, " இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. நாங்கள் முதலில் பந்து வீச தான் நினைத்தோம்.

கையில் விக்கெட்டுகளை வைத்துக் கொள்ளுங்கள்
ஆனால் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்யும் வகையில் மாறிவிட்டது. நாங்கள் முதலில் இரண்டு விக்கெட்டுகளை இழந்த பிறகு என் அணி வீரர்களிடம் இதைதான் சொன்னேன். கையில் விக்கெட்டுகளை வைத்துக் கொள்ளுங்கள். 11, 12 ஓவர் வரை விக்கெட் இழக்காமல் விளையாடுங்கள். அதன்பிறகு வரும் வீரர்கள் எவ்வளவு ரன்கள் அடிக்க முடியுமோ ரன்கள் அடிப்போம் என்று நான் கூறினேன்.
நாங்கள் செய்த தவறுகளில் இருந்தே பாடம் கற்றுக் கொண்டிருக்கின்றோம். நிகழ்காலத்தில் நாம் எப்போதுமே இருக்க வேண்டும். இந்த வெற்றியின் மூலம் கூட நாங்கள் ஒரு விஷயத்தை கற்றுக்கொண்டிருக்கின்றோம். இன்று கூட ரிங்கு சிங், வெங்கடேஷ் ஐயர் கடைசி ஐந்து ஓவரில் 50, 60 ரன்கள் அடித்தார்கள்.
இதன் மூலம் முதல் 15 ஓவர்கள் நார்மலாக விளையாடிவிட்டு கடைசி ஐந்து ஓவரில் அதிரடி காட்ட வேண்டும். முதலில் நாங்கள் 170 அல்லது 180 ரன்கள் எடுத்தாலே இந்த ஆடுகளத்தில் போதுமானதாக இருக்கும் என்று நினைத்தோம்.

ஆனால் வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங் அமைத்த பார்ட்னர்ஷிப் காரணமாக எங்களுக்கு கூடுதலாக ரன்கள் கிடைத்தது. அது மட்டுமில்லாமல் எங்கள் அணியில் மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள். மோயின் அலியால் இன்று பந்து வீச முடியவில்லை.
நரேனும், வருண் சக்கரவர்த்தியும் அபாரமாக பந்து வீசினார்கள். எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் வைபவ் மற்றும் ஹர்சித்துக்கும் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றுகூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...