குடியாத்தம் பகுதியில் பரவலாக மழை
குடியாத்தம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.
மாலை 6 மணிக்கு லேசான தூறலாக தொடங்கிய மழை சிறிது நேரத்தில் கனமழையாக பெய்யத் தொடங்கியது. சுமாா் 1 மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் நீா் பெருக்கெடுத்து ஓடியது.
தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளதால், கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டு வந்தனா். இந்த திடீா் மழையால் குளிா்ந்த காற்று வீசியது. இதனால் இதமான சூழல் நிலவியது.