Tilak Varma: 'திலக் வர்மாவை இதனால்தான் ரிட்டையர் அவுட் ஆக சொன்னோம்!' - காரணம் சொல்லும் ஹர்திக்
'லக்னோ வெற்றி!'
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி லக்னோவில் நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியில் லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.

திலக் வர்மா - ரிட்டையர் அவுட்
மும்பை அணி சேஸிங் செய்த போது 19 வது ஓவரில் திலக் வர்மாவை ரிட்டையர் அவுட் ஆக வைத்தார்கள். இந்த முடிவு இப்போது பேசுபொருளாகியுள்ளது. லக்னோவுக்கு எதிரான தோல்வி மற்றும் திலக் வர்மாவை ரிட்டையர் அவுட் ஆக செய்ததை பற்றி ஹர்திக் பேசியிருக்கிறார்.
'ஹர்திக்கின் விளக்கம்!'
ஹர்திக் கூறியதாவது, 'தோல்வியடையும்போது கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. நேர்மையாக சொல்லப்போனால் சுமாரான பீல்டிங்கால் 10-15 ரன்களை அதிகமாக கொடுத்துவிட்டோம். என்னுடைய பௌலிங்கை எப்போதுமே அனுபவித்து மகிழ்ந்து வீசுகிறேன். அதனால்தான் 5 விக்கெட் ஹால் கிடைத்தது. நான் விக்கெட் எடுக்க வேண்டும் என்பதற்காக வீசுவதில்லை.

டாட்களாக வீசவே முயற்சிக்கிறேன். பேட்டர்கள் ரிஸ்க் எடுத்து ஆடி விக்கெட்டுக்கான வாய்ப்பை கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். ஒரு பேட்டிங் யூனிட்டாகவே நாங்கள் சுமாராகத்தான் ஆடியிருக்கிறோம். அதற்கான பொறுப்பை நாங்கள் அனைவரும்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். யாரையும் குறிப்பிட்டு குறை சொல்ல முடியாது. வெல்லும்போதும் அணியாக வெல்ல வேண்டும். தோற்கும்போதும் அணியாக தோற்க வேண்டும்.' என்றார்.
'அவர் அதிரடியா ஆடல!'
மேற்கொண்டு திலக் வர்மா பற்றி பேசியவர், 'திலக் வர்மாவை ரிட்டையர் அவுட் ஆக சொன்ன சமயத்தில் எங்களுக்கு அதிரடியான சில ஷாட்கள் தேவைப்பட்டது. அவரால் அதை ஆட முடியவில்லை. அவர் முயன்று பார்த்தும் முடியவில்லை. கிரிக்கெட்டில் சில நாட்கள் இப்படித்தான் அமையும். அதனால்தான் அவரை ரிட்டையர் அவுட் ஆக்கினோம்.' எனக் கூறினார்.