2034-இல் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை அமல்! - நிர்மலா சீதாராமன்
2 கோல்கள் அடித்த ரொனால்டோ: சௌதி லீக்கில் அல்-நசீர் முன்னேற்றம்!
சௌதி புரோ லீக் கால்பந்து தொடரில் அல்-நசீர் அணிக்காக பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல்கள் அடித்து அசத்தினார்.
சௌதி புரோ லீக் கால்பந்து தொடரில் அல்-நசீர் தனது 26ஆவது போட்டியில் அல்-ஹிலால் உடன் மோதியது.
இந்தப் போட்டியில் முதல்பாதி கூடுதல் நேரத்தில் அல்-நசீர் அணிக்காக அலி அஜ்ஹாசன் கோல் அடித்தார்.
அடுத்த பாதியில் அல்-ஹிலால் வீரர் அலி அல்புலையாஹி 62ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார்.
அல்-நசீர் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 47, 88 (பெனால்டி) ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார்.
இதன் மூலம் அல்-நசீர் அணி 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சௌதி புரோ லீக் தொடரின் புள்ளிப் பட்டியலில் அல்-நசீர் 54 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் இருக்கிறது.
59 சதவிகித பந்தினை அல்-ஹிலால் வைத்திருந்தது. அத்துடன் 81 சதவிகிதம் துல்லியமாக பாஸ் செய்தும் தோல்வியுற்றது.
குறிப்பாக அல்-ஹிலால் இலக்கை நோக்கி பந்தினை 3 முறை மட்டுமே அடித்தனர். ஆனால், அல்-நசீர் இலக்கை நோக்கி 8 முறை பந்தினை அடித்தது குறிப்பிடத்தக்கது.
சௌதி புரோ லீக் புள்ளிப் பட்டியல்
1. அல்-இத்திஹாத் - 25 போட்டிகள் - 61 புள்ளிகள்
2. அல்-ஹிலால் - 26 போட்டிகள் - 57 புள்ளிகள்
3. அல்-நசீர் - 26 போட்டிகள் - 54 புள்ளிகள்
4. அல்-காதீஷியா - 25 போட்டிகள் - 51 புள்ளிகள்
5. அல்-அஹ்லி சௌதி - 25 போட்டிகள் - 48 புள்ளிகள்
Full-time!!!!!!!! pic.twitter.com/Ul3o6gJSfE
— AlNassr FC (@AlNassrFC_EN) April 4, 2025