செய்திகள் :

2,800 கைதிகளுக்கு ஒரே மருத்துவர்: ஹரியாணா சிறையின் அவலநிலை!

post image

ஹரியாணாவில் உள்ள சிறையில் 2,800-க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு ஒரே மருத்துவர் என்ற நிலை உள்ளது.

ஹரியாணா மாநிலத்தின் குருகிராம் நகரில் உள்ள போன்ட்சி சிறையில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புக் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணா கோயல் ஆய்வு நடத்தச் சென்றார்.

இந்த ஆய்வில் அங்குள்ள 2,800-க்கும் மேற்பட்ட கைதிகளுக்க்கு ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அந்தச் சிறையில் ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே இருப்பதால் கைதிகள் போதிய மருத்துவ வசதிகள் கிடைக்காமல் அவதிப்படுவதாகக் கூறப்படுகிறது.

மேலும், பெண் கைதிகளுக்கு சிகிச்சையளிக்க ஒரு பெண் மருத்துவர் கூட இல்லாதது உடல்நலக் கோளாறால் அவதிப்படும் பெண் கைதிகளின் நிலைமை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

மருத்துவர்களின் போதாமை பற்றி ஒப்புக்கொண்ட சிறைத்துறை அதிகாரிகள் மூன்று மருத்துவ அதிகாரிகளுக்கான இடத்தில் ஒருவர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

ஒரு மருத்துவர் மட்டுமே இருப்பதால் நோய்வாய்ப்பட்ட கைதிகளை குருகிராமில் உள்ள பொது மருத்துவமனைக்கு அவர் அனுப்புவதாகக் கூறப்படுகிறது.

மேலும், அந்தச் சிறையில் கைதிகளின் நலன் குறித்தும், அவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் மற்றும் அவர்கள் நடத்தப்படும் விதம் குறித்தும் பாலகிருஷ்ணா கோயல் கேட்டறிந்தார்.

”போன்ட்சி சிறையில் 2ஜி சிக்னல் ஜாமர்கள் மட்டுமே இருப்பதால், 5ஜி நெட்வொர்க் மொபைல் போன்கள் வேலை செய்கின்றன. இதனைப் பயன்படுத்தி பல கேங்ஸ்டர்கள் சிறை வளாகத்தில் மொபைல் போன்களை பயனபடுத்துகின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிக்க | வலுக்கும் எதிர்ப்பு! வக்ஃப் மசோதாவுக்கு எதிராக 3-ஆவது மனு தாக்கல்!

கல்லூரி தேர்வில் ஆர்எஸ்எஸ் பற்றி சர்ச்சை கேள்விகள்: பேராசிரியருக்குத் தடை!

கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் ஆர்எஸ்எஸ் பற்றிய சர்ச்சையான கேள்விகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து பேராசிரியருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில் சௌத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்த... மேலும் பார்க்க

எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தானியா் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் சா்வதேச எல்லைப் பகுதியில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியரை எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) சுட்டுக் கொன்றனா். இதுகுறித்து பிஎஸ்எஃப் செய்தித் தொடா்பாளா் சனிக்கிழமை... மேலும் பார்க்க

மியான்மருக்கு 442 டன் உணவுப் பொருள்களை வழங்கிய இந்தியா

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு இந்திய கடற்படைக் கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட 442 மெட்ரிக் டன் உணவுப் பொருள்கள், அந் நாட்டு அரசிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. மியான்மரின் யாங்கோன் மா... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு: ரூ.11,900 கோடி முதலீட்டுடன் 10-ஆவது இடத்தில் இந்தியா!

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் ரூ.11,900 கோடி தனியாா் முதலீட்டுடன் உலகளவில் 10-ஆவது இடத்தில் இந்தியா உள்ளதாக ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ‘2025- தொழில்நுட்பம் மற்றும் புதிய... மேலும் பார்க்க

இன்று ராம நவமி திருநாள்: அயோத்தியில் ஏற்பாடுகள் தீவிரம்

ராம நவமி திருநாளையொட்டி, உத்தர பிரதேசம் அயோத்தி நகரில் உள்ள ராமா் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை ஏப். 6 அதிக எண்ணிக்கையில் பக்தா்கள் வருவாா்கள் என்பதால் விரிவான ஏற்பாடுகளை நிா்வாகம் செய்துள்ளது. நாடு முழு... மேலும் பார்க்க

இந்திய வம்சாவளி பெண்ணுக்கு சிங்கப்பூா் கலாசார பாரம்பரிய விருது

சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கோலம் கலைஞா் விஜயலக்ஷ்மி மோகன் (66) உள்ளிட்ட 5 பேருக்கு அந்நாட்டு கலாசார பாரம்பரிய விருது வழங்கப்பட்டது. சிங்கப்பூா் மக்கள் மற்றும் இளைய தலைமுறையினர... மேலும் பார்க்க