செய்திகள் :

முக்கிய முடிவு எடுப்பார்கள் இந்த ராசியினர்: தினப்பலன்கள்!

post image

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.

மேஷம்:

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் ராஹூ - ரண, ருண ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு, சனி , கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பெண்மணிகளுக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வீட்டிற்குத் தேவையான உப கரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு பணியில் நிம்மதி இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

ரிஷபம்:

கிரகநிலை:

குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் குரு, சனி, கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும். குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். பணக்கஷ்டம் தீரும். மாணவர்கள் ஞாபக சக்தியும், கிரகிப்புத் திறனும் அதிகமாக இருக்கும். அதனால் படிப்பில் மனம் சிறந்து விளங்கும். போட்டிகளில் வெற்றி கிட்டும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

மிதுனம்:

கிரகநிலை:

ராசியில் ராஹூ - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - ரண, ருண ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் குரு, சனி , கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று கணவன், மனைவிக்கிடையில் மனம்விட்டு பேசி எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். எதிலும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். உத்தியோகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு இடமாற்றம் வருமேயானால் அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள். அது உங்கள் வருங்காலத்திற்கு ஏற்றது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கடகம்:

கிரகநிலை:

தைரிய, வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - ரண, ருண ஸ்தானத்தில் குரு, சனி , கேது - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது. வார்த்தைகளில் நிதானம் தேவை. பெண்கள் எதிலும் சற்று கவனமாக நடந்து கொள்வது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு உடன் பணிபுரிபவர்களால் ஏற்பட்டு வந்த தொல்லை அகலும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

சிம்மம்:

கிரகநிலை:

குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் குரு, சனி , கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று எதிலும் பயம் வேண்டாம். தொழில்ரீதியான படிப்பை தேர்ந்தெடுத்து படிப்பவர்கள் மிகவும் பாடுபட்டு படிக்க நேரிடும். அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு. விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

கன்னி:

கிரகநிலை:

ராசியில் செவ்வாய் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் குரு, சனி , கேது - ரண, ருண ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று தொழில் அபிவிருத்திக்காக பணத்தை இப்போது செலவு செய்ய வேண்டாம். தகுந்த நேரம் வாய்க்கும் போது பார்த்துக் கொள்ளலாம். நிலுவையிலிருக்கும் பணம் வந்து சேரும். நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

துலாம்:

கிரகநிலை:

ராசியில் புதன்(வ) , சூர்யன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய ஸ்தானத்தில் குரு, சனி , கேது - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ - அயன, சயன, போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். வீண் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நலம் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் பழகும் போது சற்று ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. யாருடனும் எதையும் கலந்து ஆலோசிக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

விருச்சிகம்:

கிரகநிலை:

ராசியில் சுக்ரன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு, சனி , கேது - சுக ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் ராஹு- லாப ஸ்தானத்தில் செவ்வாய் - அயன, சயன, போக ஸ்தானத்தில் - சூர்யன், புதன்(வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று தொழில், வியாபாரம் சுமாராக நடக்கும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். இருந்தாலும் சிலர் உங்களை புரிந்து கொள்ளாமல் இருப்பது உங்களுக்கு மன வருத்தம் அளிக்கும். குடும்பத்தில் கணவன் - மனைவியரிடையே சிறுசிறு பிரச்சினைகள் வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடப்பது மனநிம்மதியைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

தனுசு:

கிரகநிலை:

ராசியில் குரு, சனி , கேது - தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் ராஹு - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - அயன, சயன, போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று புதிய ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து நன்மை பெறுவீர்கள். குடும்பத்தில் மற்றவர்கள் உங்கள் பேச்சை கேட்கவில்லையே என்ற கவலை மேலோங்கும். புதிய வண்டி, வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை சற்று தள்ளிப் போடுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

மகரம்:

கிரகநிலை:

தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - ரண, ருண , ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று தூக்கமின்றி தவிப்பீர்கள். குடும்பத்தில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். மாணவர்கள் படிப்பில் இருந்து வரும் முன்னேற்றம் அப்படியே இருக்கும். அதனால் எழுதிய தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். ஆசிரியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

கும்பம்:

கிரகநிலை:

ராசியில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் , குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று பிள்ளைகள் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர்போல் இருப்பார்கள். எனவே எல்லோரையும் அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும். வீட்டில் சுபநிகழ்ச்சிகளுக்கான வேலைகளைத் தொடங்குவீர்கள். நீங்கள் விரும்பும் படியும் அது இருக்கும். மற்றவர்கள் உங்களை பெரிதாக நினைத்து உங்கல் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். கேட்ட இடத்தில் கடன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மீனம்:

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் குரு, சனி , கேது - அயன, சயன, போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று புதியதாக மனை, வாகனம் வாங்குவதற்கு அனுகூலமாக கைக்கு பணம் வந்து சேரும். வயிறு சம்மந்தமான உபாதைகள் ஏற்பட்டு தொல்லை கொடுக்கும். நெருப்பு சம்மந்தமான பொருள்களை கையாளும் போது கவனமாக இருக்கவும். பெண்களுக்கு நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் மனக்கவலை உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

ஆடவா் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: எஸ்ஆா்எம் ஐஎஸ்டி அணி 4-வது முறையாக சாம்பியன்!

குஜராத் மாா்வாடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அகில இந்திய பல்கலைக்கழகங்கள் இடையிலான ஆடவா் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற சென்னை எஸ்ஆா்எம் ஐஎஸ்டி அணியினா். ஜிஎம் அா்ஜுன் கல்யாண், ஐஎம் ஹரி கிர... மேலும் பார்க்க

களைகட்டிய ஸ்ரீ ராம நவமி கொண்டாட்டம் - புகைப்படங்கள்

நாடு முழுவதும் ராம நவமி இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.விழாவையொட்டி தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு அலங்காரச் சேவைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.துர்கா தேவியை பிரார்த்தனை செய்யும் ... மேலும் பார்க்க

ராமநாதசுவாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் - புகைப்படங்கள்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் வழிபாடு செய்த பிரதமர் நரேந்திர மோடி.பிற்பகல் 12.30 மணியளவில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிரதமர் நரேந்திர மோடி.கோவில் வந்த பிரதமர் மோடிக்கு ப... மேலும் பார்க்க

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு - புகைப்படங்கள்

ரூ.550 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் நரேந்திர மோடி.பாம்பன் புதிய ரயில் பாலம்.ராமர் பட்டாபிஷேக ஓவியத்துடன் பிரதமர் மோடி. அருகி... மேலும் பார்க்க

சண்முக பாண்டியனின் கொம்புசீவி கிளிம்ஸ்!

நடிகர் சண்முக பாண்டியனின் பிறந்த நாளில் கொம்புவீசி படத்தின் கிளிம்ஸ் விடியோவை வெளியிட்டுள்ளனர்.மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியனை நாயகனாக வைத்து இயக்குநர் பொன்ராம் கொம்புவீசி என்கிற பட... மேலும் பார்க்க

தன் மீதான வன்முறை வழக்கை ரத்த செய்யக்கோரி ஹன்சிகா மனு!

நடிகை ஹன்சிகா குடும்ப வன்முறை வழக்கை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். ஹன்சிகா தொழிலதிபர் சோகேல் என்பவரை 2022-ல்ஜெய்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டார்.ஹன்சிகாவின் திருமண... மேலும் பார்க்க