முட்டை, ஜூஸ் வியாபாரிகளுக்கு கோடிகளில் வந்த வருமான வரி நோட்டீஸ் - நமக்கு வந்தால்...
சண்முக பாண்டியனின் கொம்புசீவி கிளிம்ஸ்!
நடிகர் சண்முக பாண்டியனின் பிறந்த நாளில் கொம்புவீசி படத்தின் கிளிம்ஸ் விடியோவை வெளியிட்டுள்ளனர்.
மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியனை நாயகனாக வைத்து இயக்குநர் பொன்ராம் கொம்புவீசி என்கிற படத்தை இயக்கி வருகிறார். உசிலம்பட்டியை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகியுள்ளது.
நகைச்சுவை கலந்த இக்கதையில், ரௌடியாக சண்முக பாண்டியன் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமாரும் நாயகியாக தார்னிகா என்பவரும் நடிக்கின்றனர். தார்னிகா நாட்டாமை படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்தவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சண்முக பாண்டியனின் பிறந்த நாளான இன்று கொம்புவீசி படத்தின் கிளிம்ஸ் விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Let’s travel back to an era of grit, glory, and ultimate alaparai
— R Sarath Kumar (@realsarathkumar) April 6, 2025
Enjoy the wild west vibes of Usilampatti#Kombuseevi#OnceUponATimeInUsilampatti#HappyBirthdayShanmugaPandian#HBDShanmugaPandian
A @ponramVVS Direction
Produced By @StarCinemas_@mukesh_chelliah
A… pic.twitter.com/c5piTebXDE
சண்டைக்காட்சிகளுடன் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
இதையும் படிக்க: தன் மீதான வன்முறை வழக்கை ரத்த செய்யக்கோரி ஹன்சிகா மனு!