வக்ஃப் விவகாரம்: காஷ்மீரில் தமிழ்நாட்டை மேற்கோள் காட்டி விவாதம்!
‘இந்த வரலாறு தொடர்கிறது...’ கிண்டலுக்கு ஆளான எஸ். வி. சேகர்!
நடிகர் எஸ். வி. சேகர் பதிவைப் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.
இயக்குநர் சஷிகாந்த் இயக்கத்தில் நடிகர்கள் மாதவன், சித்தார்த், நயன்தாரா நடிப்பில் உருவான டெஸ்ட் திரைப்படம் கடந்த ஏப். 4 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நேரடியாக வெளியானது.
இதில் கிரிக்கெட் வீரராக சித்தார்த்தும் தொழில்முனைவராக மாதவனும் முக்கிய கதாபாத்திரங்களில் நயன்தாராவும் மீரா ஜாஸ்மினும் நடித்திருந்தனர். ஆனால், படம் உணர்வுப்பூர்வமாக இல்லை என கடுமையான எதிர்வினைகளைச் சந்தித்ததால் தோல்விப்படமாக மாறியது.
இந்த நிலையில், நடிகர் எஸ். வி. சேகர் தன் எக்ஸ் பக்கத்தில், “என்னை ஒரு படத்தில் புக் செய்த பிறகு, நானாக விலகினாலோ, விலக்கப்பட்டாலோ அந்த படம் ரிலீசாகி தியேட்டருக்கு வராது. வந்தாலும் ஓடாது. இது வரலாறு. வரலாறு தொடர்கிறது” என டெஸ்ட் படத்தின் போஸ்டரை பகிர்ந்து பதிவிட்டிருந்தார்.
என்னை ஒரு படத்தில் புக் செய்த பிறகு, நானாக விலகினாலோ, விலக்கப்பட்டாலோ அந்த படம் ரிலீசாகி தியேட்டருக்கு வராது. வந்தாலும் ஓடாது. இது வரலாறு. வரலாறு தொடர்கிரது. pic.twitter.com/qIWnmi3SJK
— S.VE.SHEKHER (@SVESHEKHER) April 6, 2025
நேரடியாகவே அப்படத்தை எஸ். வி. சேகர் தாக்கியதால் பலரும் அவரை விமர்சிப்பதுடன் கிண்டலடித்தும் வருகின்றனர்.
இதையும் படிக்க: ரூ. 500 கோடி பட்ஜெட் திரைப்படத்துக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்?