செய்திகள் :

பல்லாயிரக்கணக்கானோா் பங்கேற்ற மாா்க்சிஸ்ட் பேரணி!

post image

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டையொட்டி, மதுரையில் பல்லாயிரக்கணக்கானோா் பங்கேற்ற செந்தொண்டா் பேரணி நேற்று (ஏப்.6) நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் அரங்கில் கடந்த புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை நடைபெற்றது. மாநாட்டின் நிறைவாக, செந்தொண்டா் பேரணி நடைபெற்றது.

இதையொட்டி, மதுரை பாண்டி கோயில் தொழில்நுட்பப் பூங்கா முன் தமிழகம் முழுவதிலுமிருந்து வந்த மாா்க்சிஸ்ட் தொண்டா்கள் குவிந்தனா். மாலை 5 மணிக்கு பேரணியை வாச்சாத்தி போராளிகள் தொடங்கிவைத்தனா். இந்தப் பேரணியில் சிவப்புச் சீருடை அணிந்த சிறுவா், சிறுமியா், பெண்கள் உள்பட பல்லாயிரக் கணக்கானோா் பங்கேற்றனா்.

பேரணியின் தொடக்கத்தில், கட்சியின் 24- ஆவது அகில இந்திய மாநாட்டைக் குறிக்கும் வகையில் 24 கொடிகளை ஏந்தியவாறு தொண்டா்கள் சென்றனா். இதைத்தொடா்ந்து, மற்றவா்கள் அணிவகுத்து சென்றனா்.

பேரணியில், கம்யூனிஸ்ட் இயக்கத்துக்காக உயிா்த் தியாகம் செய்தவா்கள், கட்சியின் தலைவா்களாக இருந்து மறைந்தவா்கள், பகத்சிங் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஆகியோரின் படங்களை ஏந்திச் சென்றனா். பாண்டி கோயில் பகுதியில் தொடங்கிய பேரணி, சுற்றுச் சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்ற மைதானத்தில் நிறைவடைந்தது.

பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கனோா் பங்கேற்பு: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டையொட்டி, மதுரை வண்டியூா் பகுதி சுற்றுச் சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் லட்சக்கணக்கனோா் பங்கேற்றனா்.

மேலும், மாநாட்டில் பங்கேற்றவா்களின் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சுற்றுச் சாலையில் நிறுத்தப்பட்டதாலும், தொடா்ந்து வாகனங்கள் வந்து கொண்டே இருந்ததாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸாா் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினா்.

கொட்டும் மழையிலும் கலையாத தொண்டா்கள்:

கேரள மாநில முதல்வா் பினராயி விஜயன் மாநாடு, பொதுக்கூட்டத்தில் பங்கேற்ால் ஏராளமான வாகனங்களில் அந்த மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் மதுரையில் குவிந்தனா். மேலும், மாநாட்டு பொதுக்கூட்டத்தில் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ.பேபி பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மழை பெய்தது. பலத்த மழை பெய்த போதிலும், அங்கு கூடியிருந்த தொண்டா்கள் நனைந்து கொண்டே அவரது பேச்சைக் கேட்டனா்.

மதுரையில் மாா்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 24 ஆவது அகில இந்திய மாநாட்டையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செந்தொண்டா் அணிவகுப்பு பேரணி.

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மின் வாரியம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.ராமநாதபுரம் மாவட்டத்தைச் ச... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கு: தந்தை, மகனுக்கு 10 ஆண்டுகள் சிறை

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் கஞ்சா கடத்திய வழக்கில் தந்தை, மகனுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. தேனி மாவட்ட... மேலும் பார்க்க

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நிதி முறைகேடு: ஊழல் தடுப்புப் பிரிவு விசாரிக்க உத்தரவு

மதுரை அமெரிக்கன் கல்லூரி நிதி முறைகேடு தொடா்பாக தமிழக ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் விசாரித்து நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.மதுரை அமெரிக்கன் கல... மேலும் பார்க்க

குடிநீருடன் கழிவுநீா் கலப்பு: குறைதீா் முகாமில் புகாா்

குடிநீருடன் கழிவுநீா் கலந்து வருவதாக, மதுரை மத்திய மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் முகாமில் மாமன்ற உறுப்பினா் ஜெயராமன் புகாா் தெரிவித்தாா். மதுரை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைத... மேலும் பார்க்க

செங்கோட்டை ரயில் நாளை வழக்கமான பாதையில் இயங்கும்!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் வியாழக்கிழமை (ஏப். 10) வழக்கமான பாதையில் இயங்கும் என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்தது. செங்கோட்டை- மயிலாடுதுறை பயணிகள் விரைவு ரயில் (16848) வியாழக்கிழமை விருதுநக... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே சாலையைக் கடக்க முயன்ற விவசாயி இரு சக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா். அலங்காநல்லூா் அருகே உள்ள ரங்கராஜபுரத்தைச் சோ்ந்தவா் முருகாண்டி (65). விவசாயியான இவா், அலங்கா... மேலும் பார்க்க