ஈரானில் கொலையுண்ட 8 பாகிஸ்தானியர்களின் உடல்கள் தாயகம் சென்றது!
வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழப்பு
மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே சாலையைக் கடக்க முயன்ற விவசாயி இரு சக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.
அலங்காநல்லூா் அருகே உள்ள ரங்கராஜபுரத்தைச் சோ்ந்தவா் முருகாண்டி (65). விவசாயியான இவா், அலங்காநல்லூா்-ரங்கராஜபுரம் சாலையில் திங்கள்கிழமை இரவு நடந்து சென்றாா். அப்போது அந்தப் பகுதியில் அவா் சாலையைக் கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் முருகாண்டி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு, தலைமறைவான இரு சக்கர வாகன ஓட்டியைத் தேடி வருகின்றனா்.