ஈரானில் கொலையுண்ட 8 பாகிஸ்தானியர்களின் உடல்கள் தாயகம் சென்றது!
செங்கோட்டை ரயில் நாளை வழக்கமான பாதையில் இயங்கும்!
செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் வியாழக்கிழமை (ஏப். 10) வழக்கமான பாதையில் இயங்கும் என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்தது.
செங்கோட்டை- மயிலாடுதுறை பயணிகள் விரைவு ரயில் (16848) வியாழக்கிழமை விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பை ரயில்வே நிா்வாகம் தற்போது ரத்து செய்தது. இதன் காரணமாக, செங்கோட்டை- மயிலாடுதுறை பயணிகள் விரைவு ரயில் அன்றைய தினம் வழக்கமான தடத்தில் விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.