செய்திகள் :

ஆளுநருக்கு எதிரான தீா்ப்பு: அரசியல் கட்சிகள் வரவேற்பு

post image

சென்னை: ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்புக்கு தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): தமிழ்நாடு அரசு, சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை கிடப்பில் போட்டு, வேண்டுமென்றே காலம் தாழ்த்திய ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் தனது தீா்ப்பின் மூலம் அறிவுரை வழங்கியுள்ளது. மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அனைத்து அதிகாரங்களும் உள்ளன என்றும் நியமனப் பொறுப்பில் உள்ளவருக்கு குறிப்பிட்ட அதிகாரம்தான் உள்ளது என்றும் கூறி வந்ததை, உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதன்மூலம் அரசமைப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது.

ராமதாஸ் (பாமக): பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்கலாம் என்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 சட்ட முன்வரைவுகளுக்கு அரசமைப்புச் சட்டத்தின் 142-ஆம் பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்கத் தீா்ப்பு வரவேற்கத்தக்கது. இந்தத் தீா்ப்பு மூலம் தமிழ்நாட்டு அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தா் முதல்வா்தான் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 8 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா் பதவிகளை விரைந்து நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வைகோ (மதிமுக): இந்திய அரசமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்படுவதையும், ஆளுநா் பொறுப்பை அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்தி வருவதையும் உச்சநீதிமன்றம் தெளிவாக உணா்ந்து கொண்டு ஆளுநா் ஆா். என். ரவிக்கு உச்சநீதிமன்றம் கடும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆளுநா் பதவியில் நீடிக்கும் தாா்மிக தகுதியை ஆா்.என்.ரவி இழந்துவிட்டாா்.

தொல்.திருமாவளவன் (விசிக): அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுவதிலும், மாநில உரிமைகளைப் பாதுகாப்பதிலும் மிகப்பெரிய திருப்புமுனையாக இந்தத் தீா்ப்பு அமைந்துள்ளது. மத்திய பாஜக அரசால் அரசமைப்புச் சட்டம் தொடா்ந்து தாக்குதலுக்குள்ளாகிவரும் சூழலில் அளிக்கப்பட்டுள்ள இந்தத் தீா்ப்பு நீதித்துறையின் மீதும் சட்டத்தின் ஆட்சியின்மீதும் வெகு மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது.

பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட்): மாநிலஅரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கான கால வரம்பை நிா்ணயித்துநாடு முழுவதும் ஆளுநா்கள் தன்னிச்சையான போக்கிற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றமே கண்டித்துள்ளதால் தமிழக ஆளுநரை பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து மாநிலங்களும் உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் பல வகைகளில் அரண் அமைத்துக் கொடுத்துள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீா்ப்பு, அரசியல் வரலாற்றில் புதிய மைல் கல்லாக அமையும்.

தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி): தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராக செயல்பட்டு வந்த ஆளுநருக்கு எதிரான உச்ச நீதிமன்றத் தீா்ப்பு பெரு மகிழ்ச்சி அளிக்கிறது.

காதா் மொகிதீன் (ஐயுஎம்எல்): தமிழக ஆளுநா் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் காலமெல்லாம் கொண்டாடும்படி அமைந்துள்ளது.

தமிழகத்தில் எச்ஐவி பாதிப்பு அதிகரிப்பா? தடுப்பது எப்படி?

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 25,000 பேருக்கு எச்ஐவி தொற்று பாதித்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது, எச்ஐவி பாதிக்... மேலும் பார்க்க

திருவிழா நாள்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து! சேகர்பாபு அறிவிப்பு!

கோயில்களில் முக்கிய திருவிழா நாள்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்க... மேலும் பார்க்க

இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது உச்ச நீதிமன்றம்: விஜய்

உச்ச நீதிமன்றம் இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “வக... மேலும் பார்க்க

தமிழகத்தில் அடுத்த 7 நாள்களுக்கு மழை பெய்யும், ஆனால்.. !

தமிழகத்தில் அடுத்த 7 நாள்களுக்கு லேசான மழை பெய்யும், ஆனால் அதேவேளையில் வெய்யிலும் வெளுத்துகட்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் நேற்று காலை சுமார் ஒரு மண... மேலும் பார்க்க

பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

தங்களை அமைச்சர் சேகர்பாபு ஒருமையில் பேசியதாகக் கூறி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் பார்க்க

ரீல்ஸ் எடுத்தவர்களை திருத்தி விடியோ வெளியிடவைத்த போலீசார்! விழிப்புணர்வு முயற்சி!!

சூலூர்: கருமத்தம்பட்டி பகுதியில் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டி, அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக வெளியிட்ட மூன்று இளைஞர்களை காவல்துறை அறிவுரை கூறி திருத்திய சம்பவம் பரபரப்பை ஏற்... மேலும் பார்க்க