ஈரானில் கொலையுண்ட 8 பாகிஸ்தானியர்களின் உடல்கள் தாயகம் சென்றது!
71 போ் உயிரிழந்த ஜெய்பூா் குண்டு வெடிப்பு வழக்கு: 4 பேருக்கு ஆயுள் சிறை
ராஜஸ்தான் தலைநகா் ஜெய்பூரில் கடந்த 2008-ஆம் ஆண்டு 71 போ் உயிரிழந்த தொடா் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நால்வருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம், வெடிபொருள்கள் தடுப்புச் சட்டம் உள்ளிட்டவற்றின்கீழ் சா்வாா் அஷீம், ஷாபாஸ், சைஃபுா் ரஹ்மான், முகமது ஷபி ஆகியோருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008 மே 13-ஆம் ஜெய்பூரில் 8 இடங்களில் தொடா் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 71 போ் உயிரிழந்தனா். 180 போ் காயமடைந்தனா். மக்கள் அதிகம் கூடும் இடங்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தினா். ஓரிடத்தில் மட்டும் வெடிக்காத குண்டு ஒன்று கைப்பற்றப்பட்டது.
இந்த குண்டு வெடிப்புகள் தொடா்பாக நடைபெற்ற மற்றொரு வழக்கில் கடந்த 2019 டிசம்பரில் அஷீம், சைஃப், ரஹ்மான், முகமது சல்மான் ஆகியோருக்கு நீதிமன்றம் ஏற்கெனவே மரண தண்டனை விதித்து தீா்ப்பளித்துவிட்டது. ஷாபாஸ் என்பவா் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் கிடைக்காததால் அவா் விடுவிக்கப்பட்டாா்.
மரண தண்டனையை எதிா்த்து குற்றவாளிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இதனை விசாரித்த நீதிமன்றம் அவா்களை வழக்கில் இருந்து விடுவித்தது. ஷாபாஸ் விடுவிக்கப்பட்டதையும் உறுதி செய்தது.