செய்திகள் :

குவாலியரில் சைபர் மோசடி: ரூ.2.5 கோடியை இழந்த ஆசிரம செயலாளர்!

post image

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தின் செயலாளர் ஒருவர் சைபர் மோசடியில் சிக்கி ரூ. 2,5 கோடியை இழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் சைபர் குற்றவாளிகளும் நாளுக்குநாள் பரிணாமம் அடைந்து, புதுவிதமான மோசடிகளைக் கையாளத் தொடங்கியுள்ளனர். மோசடி அழைப்புகளாலும், குறுஞ்செய்திகள் மூலமும் நாள்தோறும் பல கோடி பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சைபர் குற்றவாளிகள் சிலர் கடந்த மார்ச் 17 அன்று நாசிக் காவல்துறை போன்று ஆள்மாறாட்டம் செய்து வாஸ்ட்ஆப் மூலம் ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தின் செயலருக்கு தொலைபேசி மூலம் அழைத்து அவரிடம் தொடர்புகொண்டு சுமார் ரூ.2.5 கோடியைக் கொள்ளையடித்துள்ளனர்.

இதுதொடர்பாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நிரஞ்சன் சர்மா கூறுகையில்,

ஆன்லைன் மோசடி தொடர்பாக புகார் ஒன்று வந்தது. அந்த புகாரில் ததிப்பூரில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தின் செயலாளர் நாசிக் காவல்துறையின் பெயரில் வாட்ஸ்ஆப் மூலம் தனக்கு விடியோ அழைப்பு ஒன்று வந்ததாகவும், அதில் தன்னுடைய பெயர் பணமோசடி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், பல கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்ததாகவும் அதனை அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ராமகிருஷ்ணன் தான் எந்தவித பரிவர்த்தனையும் மேற்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார். சைபர் குற்றவாளிகள் சரிபார்ப்பு என்ற பெயரில் அவரது ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்டனர். அதன்பின்னர், பாதிக்கப்பட்டவருக்குக் கணக்கின் நகல் ஒன்றும் அனுப்பினர். மேலும் அவர் கைது செய்யப்படுவார் என்று மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து, சைபர் குற்றவாளிகள் தொடர்ந்து 20 நாள்கள் அவருடன் தொடர்பில் இருந்துள்ளனர். அவருக்கு உதவி செய்வதுபோன்று நடித்த மோசடியாளர்கள் நாசிக் காவல்துறை அதிகாரிபோல் பேசி, ரூ. 2.50 கோடி ரூபாயை வங்கிக் கணக்கிற்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளனர். மோசடியாளர்கள், மிரட்டி பெற்ற தொகையை வெவ்வேறு கணக்குகளுக்கு அனுப்பியுள்ளனர். அந்தத் தொகையை மூன்று நாள்களுக்குள் திருப்பித் தரப்படும் என்றும் கூறியுள்ளனர்.

மிகப்பெரிய மோசடியை அறிந்த அவர், காவல் துறை உதவியை நாடியுள்ளார். தொடர்ந்து, இவ்வழக்கு சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு மாற்றப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்று அவர் கூறினார்.

உ.பி.: 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மூடல்

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் தகுதியில்லாத நபா்களால் நடத்தப்பட்டுவந்த 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்து அதிகாரி தருண் கு... மேலும் பார்க்க

ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்திருக்கும் ஆயுத ஏற்றுமதி: ராஜ்நாத் சிங்

‘2014-ஆம் ஆண்டில் ரூ. 600 கோடியாக இருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்துள்ளது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்

வணிகா்கள் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது. ஜிஎஸ்டி பதிவில் ... மேலும் பார்க்க

நியோமேக்ஸ் மோசடி வழக்கு: ரூ.600 கோடி சொத்து முடக்கம் அமலாக்கத் துறை நடவடிக்கை

பண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. மதுரை எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவ... மேலும் பார்க்க

பஞ்சாபில் பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடைய இந்தியா் அமெரிக்காவில் கைது

பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடையதாக இந்தியாவால் தேடப்பட்டு வரும் சீக்கியரை அமெரிக்காவில் அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ கைது செய்துள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ... மேலும் பார்க்க

‘யுனெஸ்கோ’ உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம்: பிரதமா் மோடி பெருமிதம்

‘யுனெஸ்கோ’ உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை மற்றும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவற்றின் அரிய கையெழுத்துப் பிரதிகள் சோ்க்கப்பட்டுள்ளன. இது, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமைக்குரிய தருணம் என்று... மேலும் பார்க்க