KKR : 'ஸ்ரேயஸ் ஐயரை ஏலத்துல விட்டதுக்கு இதுதான் காரணம்' - கொல்கத்தா சிஇஓ விளக்கம...
கேரளா: "பொய்யாக பாலியல் புகார் அளித்தேன்" - 7 ஆண்டுக்குப் பின் மன்னிப்பு கேட்ட மாணவி; நடந்தது என்ன?
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கருநாகப்பள்ளியை அடுத்த குறுப்பந்தறவு பகுதியில் பாராமெடிக்கல் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டுவந்தது.
அந்த கல்வி நிறுவனத்தைக் கோட்டயம் மதுரவேலி பகுதியைச் சேர்ந்த சி.டி.ஜோமோன் நடத்தி வந்தார். அங்கு 2017-ம் ஆண்டு எர்ணாகுளத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் படித்துவந்தார்.
பாராமெடிக்கலில் பிராக்டிக்கல் பயிற்சிக்கு அழைத்துச் சென்றபோது தன்னைப் பாலியல் தொல்லை செய்ததாக சி.டி.ஜோமோன் மீது எர்ணாகுளத்தைச் சேர்ந்த அந்த மாணவி போலீஸில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் ஜோமோனை போலீஸார் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து ஜோமோனின் வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியது.
அவர் நடத்திய நிறுவனம் நிர்மூலமானது. வழக்குக்காக கோர்ட்டுக்கு அலைந்து அல்லல்பட்டார். உறவினர்கள் வெறுத்த நிலையில், உணர்ச்சியற்ற நடைப்பிணம் போன்று வாழ்ந்து வந்தார்.

இதற்கிடையே அந்த மாணவிக்குத் திருமணம் நடந்து, குடும்ப வாழ்க்கையை நடத்தி வந்தார். அந்த மாணவிக்கு ஜோமோனின் மிகவும் கஷ்டமான வாழ்க்கை குறித்த கடந்த ஆண்டு தெரியவந்தது.
இதையடுத்து, சிலரின் தூண்டுதலின் பேரிலும், துன்புறுத்தல் காரணமாகவும் அப்போது புகார் அளித்ததாக அந்த முன்னாள் மாணவி தனது கணவரிடம் தெரிவித்தார்.
அத்துடன் தனது தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என முடிவு செய்த மாணவி கணவருடன் சேர்ந்து ஜோமோனின் ஊரில் உள்ள சர்சுக்குச் சென்று அங்கிருந்தவர்களிடம் விபரத்தைத் தெரிவித்தார்.
மேலும், ஜோமோனைச் சந்தித்துத் தான் பொய் புகார் அளித்தது குறித்துக் கூறி மன்னிப்பு கேட்டார். மேலும், ஜோமோனின் குடும்பத்தாரையும் சந்தித்து அவர் நிரபராதி என வெளிப்படையாகக் கூறி வருத்தம் தெரிவித்தார்.
மேலும் கோர்ட்டுக்குச் சென்று ஜோமோன் மீது பொய் புகார் அளித்தது குறித்துக் கூறி வழக்கை வாபஸ் வாங்கினார்.

இதையடுத்து ஜோமோனை தவறாக நினைத்தவர்கள் தங்கள் எண்ணத்தை மாற்றினர். அதேசமயம் மாணவியின் பொய் புகாரால் தன் வாழ்க்கையில் நடந்த கசப்பான நிகழ்வுகளை மறந்து புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார் ஜோமோன்.
இதுபற்றி ஜோமோன் கூறுகையில், "என்மீது பாலியல் புகார் அளித்த சம்பவம் நடப்பதற்கு முன்பு சிலர் என்னிடம் பணம் கேட்டு தொல்லை செய்தனர்.
அதன் தொடர்ச்சியாகத்தான் மாணவி பாலியல் புகார் அளித்தார். போலீஸ் என்னைக் கைது செய்ததும் பாராமெடிக்கல் நிறுவனத்தைப் பூட்டினேன்.
உறவினர்களும் என்னை வெறுத்து ஒதுக்கினர். அதன் பிறகு வாழ்கையை ஓட்ட பல்வேறு வேலைகள் செய்தேன். ஒருகட்டத்தில் தற்கொலை செய்துகொள்ளலாமா என்றும் சிந்தித்தேன். நான் பொறுமையாகப் போராடியதற்கு இப்போது வெற்றி கிடைத்துள்ளது" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb