தன் மீதான வன்முறை வழக்கை ரத்த செய்யக்கோரி ஹன்சிகா மனு!
நடிகை ஹன்சிகா குடும்ப வன்முறை வழக்கை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஹன்சிகா தொழிலதிபர் சோகேல் என்பவரை 2022-ல் ஜெய்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டார்.
ஹன்சிகாவின் திருமணம் முடிந்து 10 நாள்களுக்குள் அவருடைய சகோதரர் பிரசாந்த் மோத்வானி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துக் கோரி விண்ணப்பம் அளித்தார்.
பிரசாந்த் மோத்வானியும் அவரது மனைவி முஸ்கான் நான்சி ஜேம்ஸும் பிரிந்து வாழ்ந்துவரும் நிலையில், ஹன்சிகா மற்றும் அவரின் அம்மா மோனா மோத்வானி இருவரும் தன்னைக் கொடுமைப்படுத்தவதாகவும் கணவருடன் இணைந்து வாழ விருப்பம் தெரிவித்தும் அதற்குத் தடையாக இருக்கிறார்கள் என முஸ்கான் மும்பை அம்பாலி காவல் நிலையத்தில் சில மாதங்களுக்கு புகார் அளித்தார்.
புகாரைப் பெற்றுக்கொண்ட ஆய்வாளர், ஹன்சிகா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட்டார்.
பின், மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் ஹன்சிகா மற்றும் அவரது தாயாருக்கு முன்ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில், முஸ்கான் நான்சி தொடுத்த வழக்கு எந்த ஆதரங்களும் அற்ற உள்நோக்கம் கொண்டவை என்றும் இந்த குடும்ப வன்முறை வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என ஹன்சிகா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மனுவை விசாரித்த நீதிபதி இதுகுறித்து விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிட்டதுடன் ஜூலை 3 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.
இதையும் படிக்க: ஆயிரத்தில் ஒருவன் - 2 எப்போது? செல்வராகவன் பதில்!