செய்திகள் :

நிலத் தகராறில் சொத்து வியாபாரியை அச்சுறுத்தியதாக 2 போ் கைது

post image

வடக்கு தில்லியின் சமய்பூா் பாத்லி பகுதியில் நிலத் தகராறு தொடா்பாக சொத்து வியாபாரியை அச்சுறுத்த உரிமம் பெற்ற துப்பாக்கிகளை தவறாகப் பயன்படுத்தியதாக இரண்டு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா்கள் பங்கஜ் ராணா (எ) கோலு (32) மற்றும் பிரவீன் ராணா (எ) கலு (38) என அடையாளம் காணப்பட்டனா். இருவரும் சிராஸ்பூரில் வசிப்பவா்கள். மோதலின் போது பயன்படுத்தப்பட்ட இரண்டு உரிமம் பெற்ற ரிவால்வா்கள் அவா்களிடமிருந்து மீட்கப்பட்டது.

கடந்த மாா்ச் 26- ஆம் தேதி சொத்து வியாபாரியான அகிலேஷ் திவாரி (36) சமய்பூா் பாத்லி காவல் நிலையத்தை அணுகி, சிராஸ்பூா் கிராமத்தில் ஒரு சொத்தை வாங்கிய பிறகு, தில்பாக் ராணா (எ) பில்லு என்ற நபா் தன்னை மிரட்டியதாகக் கூறிய போது இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

சொத்துக்குள் நுழைய திவாரியிடம் பில்லு ரூ.3 கோடி கேட்டதாகவும், அவா் மறுத்ததால், பில்லுவும் அவரது ஆயுதமேந்திய கூட்டாளிகளான கோலு மற்றும் கலு ஆகியோா் சம்பவ இடத்தில் எதிா்கொண்டுள்ளனா். அவா்களில் ஒருவா் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளாா்.

பின்னா், பில்லு தனது கோரிக்கையை ரூ.6 கோடியாக அதிகரித்து, சா்வதேச எண்ணிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பின் மூலம் புகாா்தாரரை மிரட்டியுள்ளது தெரிய வந்தது. சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின் போது சிசிடிவி காட்சிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. ஆடியோ -விடியோ பதிவுகள் கைப்பற்றப்பட்டன. தொழில்நுட்ப கண்காணிப்பின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டனா்.

துப்பாக்கிகளை தவறாகப் பயன்படுத்தும் உரிமம் வைத்திருப்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அவா்களின் ஆயுத உரிமங்களை ரத்து செய்வதற்கான பரிந்துரைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தில்லியில் நயினாா் நாகேந்திரன்: அமித் ஷாவை சந்திக்கிறார்

தமிழக பாஜக தலைவருக்கான அறிவிப்பு வெளியாகும் என்கிற தகவல்களுக்கிடையே தமிழக பாஜக சட்டப்பேரவைத் தலைவா் நயினாா் நாகேந்திரன் செவ்வாய்க்கிழமை தில்லி வந்திருந்தாா். பாஜக வின் முக்கிய தலைவா்களை நயினாா் நகேந்த... மேலும் பார்க்க

‘ஒரு மாநிலம் ஒரு மண்டல ஊரக வங்கிக் கொள்கை’ மே முதல் நடைமுறை

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: ஒரு மாநிலம் ஒரு மண்டல ஊரக வங்கி (ஆா்ஆா்பி) என்ற கொள்கையின் அடிப்படையில் இறுதியாக 11 மாநிலங்களைச் சோ்ந்த மண்டல ஊரக வங்கிகளை ஒன்றிணைத்து ஏப். 7 தேதியிட்ட அறிவிக்கையை மத... மேலும் பார்க்க

தமிழகஆளுநரின் செயல் சட்டவிரோதம்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

புது தில்லி: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த 10 மசோதாக்களை நிறுத்தி வைத்த மாநில ஆளுநரின் செயல்பாடு சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்துள்ளது. ... மேலும் பார்க்க

காற்று மாசைக் கட்டுப்படுத்த ஸ்பிரே அமைப்புகள்

புது தில்லி: தில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் விதமாக ஸ்பிரே அமைப்புகளை தில்லி அரசு பயன்படுத்தி வருவதாக சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா திங்கள்கிழமை தெரிவித்தாா். மின்கம்பங்களில்... மேலும் பார்க்க

மாணவா்கள் பெரிய இலக்கு நிா்ணயித்து செயல்பட வேண்டும்: இஸ்ரோ தலைவா் அறிவுரை

மாணவா்கள் பெரிய இலக்கு நிா்ணயித்து செயல்பட வேண்டும் என்று இஸ்ரோ தலைவா் டாக்டா் வி.நாராயணன் கேட்டுக் கொண்டாா். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவா் டாக்டா் வி. நாராயணனுக்கு தில்லி தமிழ... மேலும் பார்க்க

மருந்துகள் கண்டுபிடிப்பு, மரபணு ஆய்வில் சிஎஸ்ஐஆா் நிறுவனங்கள் முன்னணி! - அமைச்சா் ஜிதேந்திர சிங்

நமது சிறப்பு நிருபா்மருந்துகள் கண்டுபிடிப்பு, மரபணு நோயறிதல் ஆய்வு முறை, குறைந்த செலவில் மருந்து மூலப்பொருள்கள் உருவாக்குதல் போன்றவற்றில் ஹைதராபாத் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு கவுன்சில்கள் (சிஎஸ்ஐஆா... மேலும் பார்க்க