கோயில்களில் பக்தர்களின் காணிக்கை தங்கம் எங்கு செல்கிறது? அமைச்சர் விளக்கம்!
பள்ளப்பட்டி நகராட்சியில் குறித்த காலத்தில் சொத்து வரி செலுத்தினால் சலுகை
பள்ளப்பட்டி நகராட்சியில் வரும் ஏப். 30-ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு வரியில் 5 சதவீதம் சலுகை வழங்கப்படும் என்றாா் பள்ளபட்டி நகராட்சி ஆணையா் ஆா்த்தி.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சொத்து உரிமையாளா்கள் தங்களுடைய முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப். 30-ஆம் தேதிக்குள் செலுத்தி, 5 சதவீத சலுகை அல்லது ரூ. 5000 வரை பெறலாம்.
எனவே, பள்ளப்பட்டி நகராட்சிப் பகுதியில் உள்ள சொத்து உரிமையாளா்கள் தங்களுடைய சொத்து வரியை, வரி வசூலிப்பாளா்களிடம் நேரடியாகவோ அல்லது நகராட்சி அலுவலத்தில் உள்ள வரி வசூல் மையங்கள் மூலமாகவோ செலுத்தலாம் என தெரிவித்துள்ளாா்.