ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை
கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
வேலாயுதம்பாளையத்தைச் சோ்ந்தவா் அப்துல்சமத் (59). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 2021-ஆம் ஆண்டு ஜூலை 19-ஆம் தேதி கரூா் அனைத்து மகளிா் காவல்நிலையத்தினரால் கைது செய்யப்பட்டாா். மேலும், அவா் மீது கரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்திலும் வழக்குத் தொடா்ந்தனா்.
புதன்கிழமை வழக்கு விசாரணையின் நிறைவில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த அப்துல்சமதுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ. 7 லட்சம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தங்கவேல் தீா்ப்பளித்தாா். இதையடுத்து, அப்துல்சமத் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.