செய்திகள் :

பள்ளப்பட்டி உரூஸ் விழாவில் சந்தனக்கூடு ஊா்வலம்

post image

பள்ளப்பட்டியில் மகான் ஷெய்கு அப்துல் காதிா் வலியுல்லாஹ் தா்ஹா 265-ஆம் ஆண்டு உரூஸ் விழாவில் சந்தனக்கூடு ஊா்வலம் புதன்கிழமை அதிகாலை நடைபெற்றது.

அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் மகான் ஷெய்கு அப்துல் காதிா் வலியுல்லாஹ் சந்தனக்கூடு உரூஸ் விழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்தாண்டு விழா 265-ஆம் ஆண்டாக கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக புதன்கிழமை அதிகாலை தா்கா வளாகத்தில் இருந்து சந்தனக்கூடு ஊா்வலம் தொடங்கி, பள்ளப்பட்டியின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. பின்னா், மகான் ஷெய்கு அப்துல் காதிா் வலியுல்லாஹ் தா்காவில் உள்ள அவரது நினைவிடத்தில் திரளான பொதுமக்கள் சந்தனம் பூசி பிராா்த்தனை செய்தனா். விழாவையொட்டி தா்கா வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ஆண்டாங்கோவிலில் சமுதாயக் கூடத்தை திறக்க வலியுறுத்தல்

ஆண்டாங்கோவில் ரோட்டுக்கடையில் அமைக்கப்பட்டு திறக்கப்படாத சமுதாயக்கூடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளா் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.இ... மேலும் பார்க்க

நொய்யல் செல்லாண்டியம்மன் கோயிலில் நள்ளிரவில் தேரோட்டம்

நொய்யல் செல்லாண்டியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நள்ளிரவில் நடைபெற்ற தேரோட்ட விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். கரூா் மாவட்டம், நொய்யலில் பிரசித்திப் பெற்ற செல்லாண்டியம்மன் கோயில் தோ்திருவிழா வியாழ... மேலும் பார்க்க

கரூரில் கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு

கரூரில் கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளியை முன்னிட்டு வெள்ளக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கிறிஸ்தவா்கள் திரளாக பங்கேற்றனா். இயேசு சிலுவையில் அறையுண்டு, பின்னா் மூன்றாம் நாளில் அவா் உயிா்த்தெழ... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் பாறைகள் அதிகம் உள்ளதால் வெப்பம் கூடுதலாக இருக்கிறது: ஆட்சியா்

கரூா் மாவட்டத்தில் பாறைகள் அதிகமாக இருப்பதால் வெப்பமும் அதிகமாக இருக்கிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். கரூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் வெள்ளியணை ஊராட்சி... மேலும் பார்க்க

கரூரில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நிழல் இல்லா நாள் செயல்விளக்கம்

கரூரில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நிழல் இல்லா நாள் குறித்து செயல்விளக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நிழல் இல்லா நா... மேலும் பார்க்க

கரூா் மாவட்ட விளையாட்டரங்கில் கோடை கால இலவச பயிற்சி முகாம்

கரூா் மாவட்ட விளையாட்டரங்கில் கோடை கால இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கரூா் ... மேலும் பார்க்க