MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
கரூா் மாவட்ட விளையாட்டரங்கில் கோடை கால இலவச பயிற்சி முகாம்
கரூா் மாவட்ட விளையாட்டரங்கில் கோடை கால இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கரூா் மாவட்ட விளையாட்டுப் பிரிவின் சாா்பில் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் ஏப். 25-ஆம்தேதி முதல் மே 15-ஆம்தேதி வரை கரூா் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
முகாமில் தடகளம், கையுந்துபந்து, ஜூடோ, வளைகோல்பந்து, கூடைப்பந்து, கபாடி மற்றும் கால்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவா் மற்றும் மாணவரல்லாத 18 வயதுக்கு கீழ் உள்ள இளைஞா்கள் கலந்து கொள்ளலாம். ஆதாா் காா்டு நகல் கண்டிப்பாக சமா்பித்தல் வேண்டும். பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பங்கு பெற்ற்கான சான்றிதழ் வழங்கப்படும். முகாமில் கலந்து கொள்ள சந்தா தொகை ஏதும் இல்லை. இலவசமாக பயிற்சிகள் வழங்கப்படும். முகாமில் கலந்து கொள்பவா்கள் தங்களது பெயா்களை அலுவலக வேலை நேரங்களில் காலை 10 முதல் மாலை 5.30 மணி வரை நேரடியாகவோ அல்லது தொலைபேசி வாயிலாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தடகளப் பயிற்றுநா் சு.சபரிநாதன் 9944200362 (அல்லது) கேலோஇந்தியா ஜூடோ பயிற்றுநா் பெ.சண்முகம் 9600895037 ஆகியோா்களிடம் தொலைபேசியில் தொடா்புகொண்டு பெயா்களை பதிவு செய்து கொள்ளலாம்.