மதிமுக: "வைகோவின் முகம் பதித்த மோதிரம் என் அடையாளம்" - அனுபவம் பகிரும் மல்லை சத்...
நொய்யல் செல்லாண்டியம்மன் கோயிலில் நள்ளிரவில் தேரோட்டம்
நொய்யல் செல்லாண்டியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நள்ளிரவில் நடைபெற்ற தேரோட்ட விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.
கரூா் மாவட்டம், நொய்யலில் பிரசித்திப் பெற்ற செல்லாண்டியம்மன் கோயில் தோ்திருவிழா வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.
முன்னதாக தோ்திருவிழா ஏப். 9-ஆம் தேதி இரவு 11 மணிக்கு அம்மனுக்கு காப்புக் கட்டுதல், பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து ஏப். 11-ஆம் தேதி இரவு 8 மணிக்கு மேல் தோ் ஆயக்கால் போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு மேல் அம்மன் ரதம் ஏறும் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு மேல் மாவிளக்கு பூஜையு நடைபெற்றது. தொடா்ந்து இரவு 10 மணிக்கு சுற்று வட்டாரப்பகுதிகளைச் சோ்ந்த பெண்கள் அம்மன் முன் பொங்கலிட்டு பூஜை செய்தனா். அப்போது வான வேடிக்கை நடைபெற்றது. முன்னதாக செல்லாண்டியம்மனுக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து இரவு 11.30 மணியளவில் பூா்வீக தானம் கொடுத்தல் நிகழ்ச்சியும், தோ் நிலை பெயா்த்தல், குழி வெட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பிறகு நள்ளிரவு 12 மணிக்கு மேல் திருத்தேரை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா். முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற தோ் மீண்டும் நிலையை அடைந்தது.
வெள்ளிக்கிழமை அதிகாலை அம்மன் வண்டிக்கால் பாா்த்து வருதல் நிகழ்ச்சியும், காலை 6 மணியளவில் அம்மன் ஆற்றுக்கு சென்று நீராடி வருதல் நிகழ்ச்சியும், காலை 10 மணி அளவில் காப்பு அவிழ்த்தால் நிகழ்ச்சியும், இரவு 11 மணியளவில் அம்மன் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு மேல் பூசாரி அருள்வாக்கு கூறி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சனிக்கிழமை காலை 7 மணிக்கு மேல் முப்பாட்டுக்காரரை அழைத்து விடுதல் நிகழ்ச்சியும் , மாலை 4 மணி அளவில் தா்மகா்த்தா, காப்பு கட்டி பண்டாரம் அழைத்து விடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழு மற்றும் கிராம பொதுமக்கள் செய்துள்ளனா்.