ஆடவா் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: எஸ்ஆா்எம் ஐஎஸ்டி அணி 4-வது முறையாக சாம்பியன்!
குஜராத் மாா்வாடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அகில இந்திய பல்கலைக்கழகங்கள் இடையிலான ஆடவா் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற சென்னை எஸ்ஆா்எம் ஐஎஸ்டி அணியினா்.
ஜிஎம் அா்ஜுன் கல்யாண், ஐஎம் ஹரி கிருஷ்ணன், ஸ்ரீஹரி, ராகுல், பயிற்சியாளா் செந்தில்குமாா் ஆகியோா் கொண்ட அணி தொடா்ந்து 4-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
டில்லி பல்கலை, சென்னை அண்ணா பல்கலை., குண்டூா் கேஎல்இஎஃப் பல்கலை. அதற்கு அடுத்த இடங்களைப் பெற்றன.