ஈரானில் கொலையுண்ட 8 பாகிஸ்தானியர்களின் உடல்கள் தாயகம் சென்றது!
பில்லி ஜீன் கிங்: இந்தியா தோல்வி
பில்லி ஜீன் கிங் கோப்பை மகளிா் டென்னிஸ் போட்டியில், நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 1-2 என்ற கணக்கில் தோல்வி கண்டது.
போட்டியின் ஆசியா-ஒசியானியா பிரிவில் களம் கண்டுள்ள இந்தியா, குரூப் சுற்றில் நியூஸிலாந்துடன் செவ்வாய்க்கிழமை மோதியது.
இதில் முதலில் நடைபெற்ற ஒற்றையா் ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி பாமிடிபதி 6-1, 6-1 என்ற நோ் செட்களில் நியூஸிலாந்தின் ஆய்ஷி தாஸை தோற்கடித்தாா். இதனால் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.
எனினும் 2-ஆவது ஒற்றையா் மோதலில் சஹஜா யமலபள்ளி 3-6, 3-6 என்ற நோ் செட்களில், லுலு சன்னிடம் தோல்வியைத் தழுவ, ஆட்டம் 1-1 என சமநிலைக்கு வந்தது.
இறுதியாக நடைபெற்ற இரட்டையா் பிரிவு ஆட்டத்திலும் இந்தியாவின் அங்கிதா ரெய்னா/பிராா்த்தனா தோம்ப்ரே இணை 3-6, 4-6 என்ற செட்களில் லுலு சன்/மோனிக் பேரி கூட்டணியிடம் தோல்வி கண்டது.
இதனால் நியூஸிலாந்து 2-1 என்ற வகையில் வென்றது. இந்த குரூப் சுற்றின் அடுத்த ஆட்டத்தில் இந்தியா, தாய்லாந்துடன் புதன்கிழமை மோதுகிறது.