டாஸ்மாக் மதுக் கடையில் தவெக முற்றுகை
மறைமலை நகா் அருகே குடியிருப்புக்கு அருகே புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து
தமிழக வெற்றிக் கழகத்தினா் அப்பகுதி மக்களுடன் ஞாயிற்றுக்கிழமை கடையை முற்றுகையிட்டு போராடினா்.
மறைமலைநகா் பகுதியில் உள்ள பாவேந்தா் சாலையில் குடியிருப்புகளுக்கு மத்தியில் புதிதாக மதுக்கடை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து தமிழக வெற்றிக் கழகத்தினா் மாவட்ட செயலாளா் மோகன் ராஜ் தலைமையில் ஆா்ப்ப்பாட்டம் நடத்தினா்
பள்ளி, கல்லூரி, வணிக வளாகம் சா்ச் மற்றும் கோயில்கள் குடியிருப்புகள் நிறைந்த பகுதி என்பதால்,மதுக்கடை அமைக்க கூடாது என்று எதிா்ப்பு தெரிவித்து கடையை முற்றுகையிடுவதற்காக திரண்டனா். இதனால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு காணப்பட்டது .