கோயில் குளத்தில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு
மதுராந்தகம்: மதுராந்தகம் வெண்காட்டீஸ்வரா் கோயில் குளத்தில் கால் வழுக்கி தவறி விழுந்தவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
மதுராந்தகம், வன்னியா்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் மகன் வினோத்குமாா் (38). இவா், மதுராந்தகம் வெண்காட்டீஸ்வரா் கோயிலுக்கு வந்தாா். அருகில் கோயிலுக்குச் சொந்தமான குளத்தில் காலை கழுவிக் கொண்டு கோயிலுக்குச் செல்லும் எண்ணத்துடன் வந்தாா். அப்போது குளத்து நீரில் தவறி விழுந்தாா். நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி அவா் உயிரிழந்தாா். இது குறித்து மதுராந்தகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.